சனி, 20 ஏப்ரல், 2013

தேர்தல் அவசரம்!!! தேர்தல் எங்கே?

தேர்தல் அவசரம்!!! தேர்தல் எங்கே? தற்செயலாக ஜீப் "செயலகம்" நோக்கி போகிறது. தமிழ்நாடு சட்டசபை கலைக்கப்பட்டது வருகிறது?

படம் & தகவல்: Jawad

தொ.மு.ச. செ.குப்புசாமி காலமானார்!

திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை தலைவரும், முன்னாள் எம்.பியுமான செ.குப்புசாமி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில நாட்களாக குப்புசாமி உடல் நலமின்றி இருந்தார். இதனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

முன்னாள் எம்.பி.,யான அவரின் மறைவுக்கு, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, தி.மு.க.,அறிவித்துள்ளது. சென்னையில், இன்று அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் செ.குப்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டையில் பள்ளி இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு!

பரங்கிப்பேட்டை பகுதியில் பள்ளி இடை நின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் கண்டறிந்து கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள்
கண்டறியும் பணி நடந்தது. இதில் பரங்கிப்பேட்டை பகுதியை
சேர்ந்த ஊராட்சி பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் பரங்கிப்பேட்டை பகுதியில் 210 குடியிருப்புகளில் வீடு, வீடாக சென்று இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் குறித்து
விசாரணை செய்து கணக்கு எடுப்பு செய்தனர்.
இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அம்பிகாகுமாரி, உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்கள் தியாகராஜன், சரஸ்வதி லட்சுமி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், கிராம கல்விக்குழு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.