புதன், 29 மே, 2013

இந்திய பன்னாட்டு பள்ளியில் பரங்கிப்பேட்டை மாணவி சாதனை!



ஜெட்டா: +2 பொதுத் தேர்வு முடிவுகளை அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜெத்தாவிட் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 95.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் 3-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் பரங்கிப்பேட்டை மாணவி சபியுன்னிஸா.

பரங்கிப்பேட்டையைச் சார்ந்த மொய்தீன் சாஹிப் மற்றும் கௌஸுன்னிசா தம்பதியின் புதல்வியான சபியுன்னிஸா ஜெத்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சி.பி.எஸ.இ. பாடத்திட்டத்தின் முறையில் நடைப்பெற்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று பள்ளியின் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

மாணவியின் இந்த சாதனை குறித்து சவுதி அரேபிய நாளேடுகளான சவுதி கெஸட் மற்றும் அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 மே, 2013

இறப்புச் செய்தி: பாலு (எ) பாலசுப்ரமணியன்

பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு, ரங்கசாமி செட்டியார்(late) அவர்களின் பேரனும், பக்கிரி செட்டியார்(late)  அவர்களின் மகனும், பொண்ணம்பலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார், சுப்ரமணியம் செட்டியார், ராஜேந்திரன் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோரின் சகோதர்ருமான பாலசுப்ரமணியன்  நேற்று இரவு 1 மணி அளவில் காலமாகிவிட்டார்.

இன்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
தகவல்: மரு. லெ. பூபதி

வெள்ளி, 24 மே, 2013

வாத்தியாப்பள்ளி மஸ்ஜித் திறப்பு விழா

வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூது பந்தர் பரங்கிப்பேட்டை மாநகரில் மஸ்ஜித் என்ற இறையில்ல பள்ளிவாசல்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பழமையான பள்ளிவாசல்கள் புணர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழமையும், பாரம்பரியமும் மிக்க "செய்யது அலீ என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிதாக உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாத் முதல் ஞாயிற்றுக்கிழமை (2ந் தேதி) மாலை 5 மணிக்கு திறப்பு விழா காண இருக்கின்றது. ஊரின் முக்கிய பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 

சிறப்பு விழாவிற்கு முதல் நாள் 1ந் தேதி சனிக்கிழமை பெண்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள திறப்பு விழா பிரசுரத்தில் பாணலாம்.



பிரசுரம் உதவி: ஹமீத மரைக்காயர்
படம் உதவி : pno.news