திங்கள், 12 ஜனவரி, 2015

Follow-up: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)


சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரி வழியாக செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்வதால் புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பிலும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று காலை சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புவனகிரி பாலம் முகப்பில் முகாமிட்டு, அந்த வழியாக வந்த சிதம்பரம் - கடலூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் 'வழி புவனகிரி' எனும் ஸ்டிக்கர் ஒட்டினார்.

இதுபோன்று பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் 'வழி பரங்கிப்பேட்டை' என்று பெயர்ப்பலகை வைப்பதுமில்லை.  பயணிகள் விசாரித்தாலும் இது நேர்வழி என்று சொல்லி ஏமாற்றிக ஏற்றிக் கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் 'வழி பரங்கிப்பேட்டை' என்று ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி எடுப்பாரா?
இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம். பார்க்க: 'வழி பரங்கிப்பேட்டை' (!?)
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரிடமிருந்து வந்த பதில்....


வியாழன், 18 டிசம்பர், 2014

மனித நேய விருது பெறுகிறார் MYPNO ஆசிரியர் ஃபக்ருத்தீன்

இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India - DYFI)  எதிர்வரும் டிஸம்பர் 30ந் தேதி பு. முட்லூரில் "போதைக்கு எதிராக ஊரைக்கூட்டுவோம்" என்ற கருப்பொருளில் கலை இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
 
இந் நிகழ்ச்சியில், "டாஸ்மாக் கடைகளால் அதிகம் சீரழிவது தனி நபர்களே! சமுதாயமே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமுதாயத்தில் சிறப்பாக பணியாற்றும் நபர்களுக்கு "மனித நேயர்" விருதுகளும் வழங்கப்படுகின்றன.
 

இவ்விருது பெறும் பட்டியில் நமது MYPNOன் ஆசிரியர் எம்.ஜி. ஃபக்ருத்தீன் அவர்களும் இடம் பெற்றுள்ளார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு கே. பாலகிருஷ்ணன் அவர்கள் விருதுகளை வழங்க இருக்கின்றார்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

BMD கிளப் 59வது ஆண்டு: அகில இந்திய ஐவர் பூப்பந்தாட்டப் போட்டிகள்

பரங்கிப்பேட்டை: BMD கிளப் தோற்றுவித்து 59 ஆண்டுகள் நிறைவையொட்டியும், மர்ஹூம் D. முஹம்மது அப்துல் காதர் நினைவாகவும் அகில இந்திய ஐவர் பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ந் தேதி காலை முதல் 10ந் தேதி இரவு வரை பரங்கிப்பேட்டை BMD மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
மிகவும் விமரிசையாக நடத்தப்படவுள்ள இப்போட்டிகளில் முதல் பரிசு ரூபாய் 40 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 25 ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 20 ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் என்று ரொக்கப் பரிசுகள் மேலும் பல சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மும்பை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் பல அணிகள் இந்தியாவின் பல பகுதிகளிலிலும் கலந்து கொள்ள இருக்கின்றன.
 
இறுதி நாளான ஞாயிறு அன்று போட்டிகள் முடிவடைந்த உடன் பரிசளிப்பு விழாவும், அதில் BMD கிளப்பின் முன்னாள் விளையாட்டு வீரர்களை கவுரவபடுத்தபடுவார்கள் என்றும், இந்தப் போட்டிகளுக்கு தனி கமிட்டி அமைக்கப்பட்டு ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக இருக்கும் என்றும் BMD வட்டாரம் தெரிவிக்கிறது.