ஞாயிறு, 31 மே, 2015

கோலாகலமாக துவங்கியது SSA கால்பந்து திருவிழா....!



பரங்கிபேட்டையின் புகழ்பெற்ற SSA (மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி) நினைவு கோப்பைக்கான கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக துவங்கியது. 

3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, புதுவை, கடலூர், பரங்கிபேட்டை, சிதம்பரம், காரைக்கால், அத்திக்கடை, பூதமங்கலம், கூத்தாநல்லூர், நாகூர், பொதக்குடி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் அதிராம்பட்டினம் போன்ற ஊர் அணிகளும்,  சத்தியபாமா பொறியியல் கல்லூரி அணியும் கலந்து கொள்கின்றன.

துவக்க நிகழ்ச்சியில் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர் SSA மேலாளர் G.M. நெய்னா தலைமையில் SSA விழா குழுவினர்.

படங்கள்: ஸ்மார்ட் தமீம்

நாளை பரங்கிப்பேட்டை தனியார் பள்ளி முற்றுகை

கூடுதல் கல்விக் கட்டணங்களை வசூலிக்கும் பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை (திங்கள் கிழமை ஜூன் 1, 2015) பரங்கிப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தனியார் பள்ளி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.


இதுபோன்று கூடுதல் கட்டணம் வகூலிக்கும் அனைத்து பள்ளிகளையும் முற்றுகையிட்டால் இதற்கொரு முடிவு கட்ட முடியும்.

புதன், 20 மே, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

தொடர்ந்து பதினொறாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. 

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகி கலிமா K. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் Dr. M.S. முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M. ஹமீத் அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகள் I. இஸ்மாயில் மரைக்காயர், M.S அலி அக்பர், H.M.H. ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்க, தவ்லத் நிஸா அரபிக்கல்லூரி நிர்வாகி S.O சையத் ஆரிஃப் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...








படங்கள்: ஷேக் ஆதம்