ஞாயிறு, 5 மார்ச், 2023

மீராப்பள்ளியில் தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற தலைப்பில் 
10 , 11, 12ஆம்  வகுப்புகள் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இன்று  05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது


அன்வாருஸ்_ஸுஃபா
தீனியாத் மக்தப் மதரஸா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மீராப்பள்ளி நிர்வாகிகள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவருமான முஹம்மது யூனுஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

மீராப்பள்ளி முத்தவல்லி ஜமால் முஹம்மது வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்வில் முனைவர் சாதிக் அப்துல் ஹமீது
தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து உரையாற்றினார்.
அரசு பொதுத் தேர்வை  எதிர்கொள்வது எப்படி, தேர்வின் நுணுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி சகோ.அலி அப்பாஸ்  பேசியதை மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்தனர். 






தேர்வு குறித்தான இஸ்லாமிய பார்வை மேலும் தேர்வோடு சேர்ந்த இஸ்லாமிய முறை, தொழுகை, நிய்யத் போன்றவைகள் குறித்து மீராப்பள்ளி இமாம் அஹமது கபீர் மற்றும் ஹமீது மரைக்காயர் ஆகியோர் உரையாற்றினர்கள். 

நிகழ்ச்சியில்  70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் அரசு பள்ளி மாணவர்களின் வருகை சொற்பமாகவே இருந்தது.

உலகக்கல்வியும் மார்க்கக் கல்வியும் தனித்தனியாக பார்க்கப்படுகின்ற நிலையில் பள்ளிவாசல்கள் இதுபோன்ற கல்வி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது நிச்சயம் ஆரோக்கியமானது. மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். 

#MYPNOnews

சனி, 17 டிசம்பர், 2022

ரியாத் பரங்கிப்பேட்டை சங்கத்திற்கு விருது

ரியாத் காயிதேமில்லத் பேரவை சார்பில் சந்திப்போம் சங்கமிப்போம் என்ற தலைப்பில் கிளாஸிக் அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) மாலை
நடந்த நிகழ்ச்சியில் மக்களவை முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவருமான அஃப்ஸலுல் உலமா M. அப்துர் ரஹ்மான் M.A கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்வில் ரியாத்-தில் சிறப்பாகச் செயல்படும் ஊர் அமைப்பு என்ற வகையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம் அமைப்புக்கு காயிதேமில்லத் பேரவை சார்பாக விருதும் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது






PIA சார்பாக முன்னாள் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன், தலைவர் R. தமீஜுத்தீன், பொருளாளர் S.காதர்மஸ்தான் ஆகியோர் பாராட்டுக் கேடயத்தை முன்னாள் எம்.பி அப்துல்ரஹ்மானிடம் பெற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்வில் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

சனி, 10 டிசம்பர், 2022

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பதவியேற்பு விழா 2022

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை ஒட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய ஜமாஅத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற உள்ளாட்சி நிதித் தணிக்கையாளருமான I.முஹம்மது இல்யாஸ் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு 27-11-2022 அன்று தேர்தல் நடைபெற்று அன்றே முடிவும் அறிவிக்கப்பட்டது. 

இதில் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர்  வெற்றி பெற்றார்.  

இதனையடுத்து இன்று 10-12-22 ஷாதி மஹாலில் நடைபெற்ற பதிவியேற்பு நிகழ்ச்சியில் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டது. 

H. முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற விழாவை மீராப்பள்ளி இமாம் M.S. அஹமது கபீர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். 

கலிமா. K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பதவிப்பிரமாணம் செய்து  வைக்க கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் ஜமாத்தின் புதிய தலைவாராக பொறுபேற்றுக்கொண்டார். 

இதனை தொடர்ந்து டாக்டர். S. நூர் முஹம்மது உப. தலைவராகவும், B.M.H. பாவசா மரைக்காயர்‌, U. ஜெய்னுலாபுதீன் மாலிமார், S. முஹம்மது அலிகான், M. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் பொறுபேற்றுக்கொண்டனர்


தலைவர்: கேப்டன் M. ஹமீது அப்துல் காதர்

உப தலைவர்: டாக்டர். S. நூர் முஹம்மது

M.S. காஜா மெய்தீன் பொதுச் செயலாளராகவும், N.M. மெஹ்ராஜ் பொருளாளராகவும் பொறுபேற்றனர். 

N.M. மெஹ்ராஜ் பொருளாளராகவும், M.S. காஜா மெய்தீன் பொதுச் செயலாளராகவும், 


மற்ற நிர்வாகிகள் விபரம் கீழே  

துணைத் தலைவர்கள்: B.M.H. பாவசா மரைக்காயர்‌, U. ஜெய்னுலாபுதீன் மாலிமார், S. முஹம்மது அலிகான், M. முஹம்மது இப்ராஹிம்


நிர்வாக செயலாளர்கள்

செயலாளர்கள்

வழக்கறிஞர்கள்: M.E. செய்யது அன்சாரி, M.Y. முகம்மது ஹனிபா 


பைத்துல்மால் செயலாளர்கள் 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் குழு 


விளையாட்டு குழு 


ஊடக அணி 


ஜமாஅத் மேம்பாட்டு குழு 


ஷரீஅத் அணி 





நிகழ்ச்சியில் G.M. தல்பாதர் மரைக்காயர், Er. H. முஹம்மது ஷாஃபி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் டாக்டர் ரஹ்மான், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், செல்வி ராமஜெயம், SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, ரஷீத் ஜான்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகதிற்கு வாழ்த்து தெரிவித்து  பேசினர். 

விழாவில் பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் "எதிர்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டைக்கு எனது சட்டமன்ற நிதியிலிருந்து சாலைப் பணிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் நிர்வாக ஒத்துழைப்புடன் நற்பணிகளை தொடர்வேன் என்று தெரிவித்தார் .

ஏற்புரை ஆற்றிய கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் “ஜமாத்திற்கு வரும் வழக்கு, பிணக்குகளில் அதில் வரும் தீர்ப்புகளில்  ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாகவும் வருவது இயல்பு. இதை தவிர்க்க முடியாதது. என்னால் முடிந்த அளவு அதில் நேர்மையாக இருக்கவே செயல்படுவேன். தீர்ப்புகளில் எந்த ஒருவருக்கு அதிருப்தி நிலவுகிறதோ அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதற்காக உலமாக்கள் குழுவினரிடம் பரிசீலினை செய்யலாம். பிறகு அவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது” என்று பேசினார்

கேப்டன் பாபா பக்ருதீன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். அப்துல் பாசித் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. 


நிகழ்ச்சி அழைப்பிதழ்