ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

அலமாரிக்கு வெற்றி!

இன்று நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் பதவிக்கான பொதுத்தேர்தலில் அலமாரி சின்னத்தில் போட்டியிட்ட முஹமது யூனுஸ் வெற்றி பெற்றார். அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
வாக்கு விபரம்:
பதிவானவை: 1966
முஹம்மது யூனுஸ்: 1163
நூர் முஹம்மது: 785
செல்லாதவை: 18

சற்றுமுன் முடிந்த வாக்கு எண்ணிக்கையின்படி 378 ஓட்டு வித்தியாசத்தில் முஹம்மது யூனுஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து சான்றிதழையும் வழங்கினர். சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தியவாறு வீதிகளில் உலா வருகிறார் அலமாரி சின்னத்தின் வெற்றி வேட்பாளர் யூனுஸ் .
சான்றிதழை பெறுகிறார்


சின்னகடை முனையில் நன்றி அறிவிக்கிறார்

தகவல்கள்: களத்திலிருந்து இப்னு இல்யாஸ்

கடைசி நொடிப்பொழுதின் வாக்காளர்.

மிகச் சரியாக 5 மணிக்கு கடைசி வாக்காளராக தனது வாக்குப்பதிவினை செலுத்துகிறார்.
 
புகைப்படம்: இப்னு இல்யாஸ் 
 

இன்று இரவு 9 மணிக்குள் முடிவுகள்

இன்று மாலை 5 மணியுடன் முடிவுற்ற ஜமாத் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்னும் சற்று நேரத்தில் ஷாதி மஹாலில் துவங்க உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று 9 மணிக்குள் அறிவிக்கப்பட உள்ளது. சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 7 மணிக்கு துவங்க உள்ள வாக்கும் எண்ணும் பணிக்காக தயார் நிலையில் உள்ளது.