திங்கள், 20 ஜூலை, 2009

மாற்றம் வரும் வரை தனித்துதான் செயல்படுவோம் - த.த.ஜ (TNTJ)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பரங்கிப்பேட்டை கிளை சார்பில் தோணித்துறை அருகில் அஜீஸ்மியான் இல்லத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பி.ஜெய்னுல்லாபுதீன் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
ஊரின் ஒற்றுமையை மையப்படுத்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் என்று ஒன்று சிறப்பாக செயல்பட்டு வரும்போது, இப்படி எல்லாவற்றிற்கும் தனித்துதான் செயல்படுவோம் என்று நீங்களே ஏன் தனியாக செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் அளித்த பதிலை அறிய www.mypno.com

வியாழன், 16 ஜூலை, 2009

கடலில் காற்று வீசுவதால் பரங்கிப்பேட்டையில் மீன் விலை திடீர் உயர்வு

பரங்கிப்பேட்டை:

கடலில் பலமான காற்று அடிப்பதால் மீனவர்கள் அதிக அளவில் மீன் பிடிக்க முடியவில்லை.

இதனால் நேற்று பரங்கிப்பேட்டையில் மீன் விலை திடீரென உயர்ந்தது.

பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை அன்னன்கோயிலில் ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு மத்தி, சூரை மீன் வகைகள் அதிகளவு கிடைத்தது.

இதனால் இங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினமும் சுமார் 20க்கு மேற்பட்ட லாரிகளில் ஏற்றுமதி செய்ததால் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தது.

இந்நிலையில் சில நாட்களாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

நேற்று கடலில் காற்றின் தாக்கம் அதிகம் இருந்ததால் மீனவர்கள் வலையை விரித்து மீன் பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

இதனால் வெளிமாநிலங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும் மத்தி, சூரை மீன்கள் வரத்து குறைந்ததால் 500 ரூபாயிற்கு விற்கும் ஒரு பாக்ஸ் மீன் நேற்று ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது.

இதனால் நேற்று கேரளாவிற்கு ஐந்து லாரிகளில் மட்டுமே மீன் கொண்டு செல்லப்பட்டது.

புதன், 15 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐந்து லட்சம் செலவில் ஆழப்படுத்தப்பட்ட குளம் மக்களுக்கு பயன்படாத அவலம்

ஐந்து லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட குளம் முறையாக தூர்வாரப்படாமல் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் சந்தைதோப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2007-2008) ஐந்து லட்சம் ரூபாய் செலவில் குளம் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.

ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமல் பெயரளவில் குளத்தில் இருந்த மணலை ஒதுக்கி விட்டு, கரைப்பகுதியில் கல் அடிக்கப்பட்டது.

குளத்தை முழுமையாக தூர் வாரி சரி செய்யாததால் கடந்த நவம்பரில் ஏற்பட்ட மழையில் குளத்தில் தண்ணீர் தேங்கி குளம், தூர்ந்து, எவ்வித பயன்பாடும் இன்றியுள்ளது.

இந்த குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.