திங்கள், 13 செப்டம்பர், 2010

படகு சவாரியை துவக்கி வைத்தார் செல்வி ராமஜெயம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை படகு குழாமில் பொது மக்கள் படகு சவாரி செய்ய ஏதுவாக படகு சவாரி சேவை நேற்று காலை துவங்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். இதில் படகு சவாரி ஒப்பந்ததாரர் வீராசாமி, வார்டு கவுன்சிலர்கள் ஜெகநாதன், பாவாஜான், நடராஜன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படகு சவாரி செய்வதற்று 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் சவாரியில் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் பங்கு கொண்டார்.

Photos: TNTJ, PNO

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?


பரங்கிப்பேட்டை: வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரிய பெருமையும் நிறைந்த கடற்கரைபட்டினமான பரங்கிப்பேட்டைக்கு அதன் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்பது பலதரப்பு மக்களின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது. கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்ததில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனை பரங்கிப்பேட்டை 6-வது வார்டு கவுன்சிலர் சந்தித்து மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சனி, 11 செப்டம்பர், 2010

பரங்கிப்பேட்டையில் ஈகைத் திருநாள் தொழுகை


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் நேற்று காலை 8.30 மணிக்கு நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துக் கொண்டனர். தொழுகைக்குப் பிறகு அனைவரும் தத்தமது வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக 7.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மர்கஸ் அருகில் உள்ள ஒரு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பிறகு தமிழில் குத்பா உரையும் நிகழ்த்தப்பட்டது.