வெள்ளி, 5 ஜூலை, 2013

மக்தப் மதரஸா ஆண்டு விழா!







பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் குர்ஆன் மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா கடந்த வாரத்தில் நடைப்பெற்றது. மீராப்பள்ளி, கவுஸ் பள்ளி, மக்தூம் அப்பா பள்ளியில் நடைபெற்ற மக்தப் மதரஸா ஆண்டு விழாக்களில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவில், மதரஸா மாணவ - மாணவியரின் கிராஅத், பயான் போட்டிகள் நடைப்பபெற்றன. இதில் பங்கேற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திங்கள், 1 ஜூலை, 2013

சிங்கை டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பரங்கிப்பேட்டை அன்வர்!


சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை ஜுன்னத் மியான் தெருவினைச் சேர்ந்த எம்.ஹெச்.காஜா மொய்னுத்தீனுடைய மகன் கே.அன்வர் ஹஸன், இவர் கடந்த 5 ஆண்டுக்காலமாக சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில், சுற்றுப்புற சூழல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  சமீப காலமாக சிங்கப்பூரில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரப்பு ஏடிஸ் வகை கொசு குறித்து தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், பெரிய வடிவமைப்பில் ஏடிஸ் கொசு-வினை உருவாக்கி, ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான செய்தி நேற்றைய சிங்கப்பூர் ஆங்கில நாளிதழான வெளிவந்துள்ளது.
சமூக நல நோக்குடன் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து அன்வர் ஹசனுக்கு MYPNO வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.