சனி, 16 நவம்பர், 2013

யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் 'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், யோகா வகுப்பு, அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல், மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாதைகளும், யோகா பயிற்களும் இடம்பெற்றன. 

செவ்வாய், 29 அக்டோபர், 2013

வஃபாத் செய்தி - அக். 18: ஜுலைஃகா பீவி

ஃபாத்திமா நகரில் மர்ஹூம் அப்துல் கறீம் அவர்களின் மனைவியும், ஏ.கே. அப்துல் பாரீ அவர்களின் தாயாரும், எஸ்.அப்துல் ஹமீது அவர்களின்  மாமியாரும், ஏ.பி. அப்துல் நஜீர் (பாபு), நமது MYPNO இணையதளத்தின் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, ஐ. முஹம்மது ஹனீஃப், ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (சேட்டு) மற்றும் ஏ.ஹெச். லியாகத் அலீ ஆகியோரின் பாட்டியாருமாகியஜுலைஃகா பீவி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் நாளை (18.10.2013 வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.

ஆலயத் தொடர்புடைய அகம் கொண்ட இளைஞர்கள்

பெருநாள் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகும் இந்த இரு இளைஞர்கள் பிரார்த்தனையில்... அவர்களுக்கு தெரியாமல் ஒரு ஸ்நாப்.

இடம்: மீராப்பள்ளி, பரங்கிபேட்டை
க்ளிக்: அபூ பிரின்சஸ்