வியாழன், 17 ஏப்ரல், 2008

சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி


கடந்த சில காலங்களாக பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தின் கவனிக்கப்படாத கூறாக மாறி சீர்கேடுகளின் விளிம்புகளில் இருக்கும் இளஞர்கள பற்றி மிகுந்த அக்கறை கொண்டு அது பற்றிய ஒரு சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி அப்பாபள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய சகோதர் ஜி.நிஜாம் அவர்கள் சக்திவாய்ந்த இளய சமுதாயம் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வழி நடத்தப்பட்டது, தற்போது அதன் அவல நிலை பற்றியும் மிகவும் சிந்தனை தூண்டும் வகையில் பேசினார். வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய நமதூர் இளஞர்கள், இருள்களில் ஒளிந்து கொண்டு வெளிச்சத்தை பார்க்கும் நிலை இருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, இதற்கான தீர்வு பற்றி கலந்து கொண்ட சகோதரர்களிடம் ஆலோசனைகள கோரப்பட்டது.

வழிகாட்ட சரியான தலைமை இல்லாதது, தேவையற்ற செல்போன், பைக் கலாச்சாரம், பெற்றோர்களின் அதீத பரிவு மற்றும் அதீத கண்டிப்பு, தொடர் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தில் தேக்கம், தகாத நண்பர்கள் சேர்க்கை, பொறுப்பினை அறியாமல் இருத்தல் (அ) தட்டி கழித்தல், திரைப்படங்களினால் மாற்றியமைக்கப்படும் சமுதாய மதிப்பீடுகள், வலிமையான ஜும்ஆ எனும் மிகப்பெரிய விஷயம் நீர்த்துபோன முறையில் பிசுபிசு உரையோடு கையாளப்படுதல், பெரும்பாலான தந்தைமார்கள் வெளிநாடுகளில் இருப்பதால் பிள்ளகளின் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பற்ற வளர்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக முன்வைக்கப்பட்டன.

இளஞர்கள் குறித்த ஐக்கிய ஜமாஅத் மற்றும் இதர அமைப்புக்களின் நிலைப்பாடு மற்றும் செயற்பாடின்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

தீர்வுகளாக, தஸ்கியா போன்ற தக்வா (இறையச்சம்) ஊட்டும் விஷயங்கள முன்னெடுத்தல், நன்னன்பர்களாக அவர்களுடனே ஊடாடி நன்மையை எத்திவைத்தல், விளயாட்டு போன்றவற்றில் கவனத்தை திசைதிருப்புதல் போன்றவை முன்வைக்கப்பட்டன. விளம்பரங்கள் ஏதும் செய்யப்படாத இச்சிறிய நிகழ்ச்சிக்கு கூடிய மிகஅதிகமான பங்கேற்கேற்பாளர்கள் சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்ற திருப்தியை அனைவர் உள்ளத்திலும் ஏற்படுத்தியது. அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

5 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ்.
    இளைஞர் ஒழுக்க நலனில் அக்கறை கொண்டு நடத்தப்படும் இம்மாதியான அமர்வுகள் தொடர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன்.

    தங்களின் பலம் காட்ட கூட்டங்களை கூட்டும்போது மட்டும் இளைஞர்களை பயன்படுத்திக்கொள்ளும் சமுதாய இயக்கங்கள்,அவர்களின் ஒழுக்க நெறிகளை கவனத்தில் கொள்வது எப்போது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ்.

    இதோடு இதனை நிறுத்திவிடாமல் தொய்வூநிலை இல்லாமல் புத்துணர்ச்சி ஊட்டி கொண்டே இருந்தால் ஒரு மாற்றம் ஏற்படும். கட்டாயம் மாற்றம் வேண்டும் இல்லையேல் நாம் சந்திக்க ??? & சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. Attenstion janab g. nijam brother,please try to change the president to be guideing proper manner and lead our comunity in future. but it is not passible to you, whybecase you are blind supporter of non guideing president. it is my throught may be rang.I appeal all of brothers of our native,forget all difference of opinience and come forwade to give our valiable service to our people.insha ALLAH we will get victary.

    பதிலளிநீக்கு
  4. One Sari (Group) might want to change the President, While some other Saaraar (groups) don't want so, and the current set up to continue.

    Difference of Opinion is the nature of this multiplex world, and it will prevail till the existence of this 'Dhunya'.

    In other words,100% Unonimus (orumiththa) opinion only possible in Aakhira(th).

    All we need to go for a democracy in such issues and that does not mean the 'Indian Electoral' or 'Pseudo Democracy' where a man who got 20% votes got victory eventhough 80% against him.

    As per our religious tradition based on 'Kuhlafaaye Raashideen', A candidate should get 51% of voter's confidence for reaching such Chair.

    In our hometown, I don't know howmuch votes of confidence the current president attains, but I knew he got the majority at that time.

    பதிலளிநீக்கு
  5. Dear brother Abu ahamad,assalamualikkum.really our town president is a 24hours hard worker.nevadayes no one any person available like him.but it is also real no demacaracy and no human rights in the jamath affires. he was unanimues elected as the jamath president,but at the same time many muslim people had given vote aginst him and his groups.i would like to bring to your kind attensition that it is not my intensition to change our president,janab nijam said that no one a president to proper guideing to our people in this regard only i request to janab nijam like that i agree with you dont want change the president, but take stepes to product human rights and give chance to participate and submit others opinion before jamath in intrest of our native.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...