செவ்வாய், 6 மே, 2008

கடைகளை உடைத்துக் கொள்ளை.


பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் அருகே அமைந்துள்ள ஜெய்லானி காம்பிளக்ஸ் வளாகதில் அமைந்துள்ள சவுதியா டைம் சென்டர் மற்றும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் ஆகிய இரு கடைகளிலும் இன்று அதிகாலை சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவாடபட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்தில் சவுதியா டைம் சென்டர் கடையில் சுமார் 40,000 மதிப்புள்ள மொபைல் போன்கள், கைகடிகாராங்கள் மற்றும் ரொக்கமாக 2500 ரூபாயும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் கடையில் சுமார் 20,000 மதிப்புள்ள துணிமணிகள், ஆபரன மற்றும் வாசனை திரவிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறும் போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு அறியாத நபர் தன்னுடன் புவனகிரி வரை பயணித்ததாகவும், அந்நபரிடம் இருந்த இருபைகளில் நிறைய பொருட்கள் வைத்திருந்தகவும் போலிஸ் விசாரனையில் தெரிவித்தார்.

புகாரை அடுத்து, இத்திருட்டு சம்பவதில் தொடர்புடைய நபர், அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரனை நடத்தி வருக்கிறார்கள்.

இத்தகைய திருட்டு பரங்கிப்பேட்டையில் அரிதான ஒன்று என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 கருத்துகள்:

  1. பெயரில்லா6 மே, 2008 அன்று 8:31 PM

    Inna lillahi wa inna ilaihi raajioon

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6 மே, 2008 அன்று 9:34 PM

    எப்பவும் ஆட்கள் நடமாட்டம் உள்ள சஞ்சிவிராயர் தெரு பகுதியில் அதுவும் காலை 4 மணிக்கா! என்ன கொடும சார் இது! காலை 4 மணிக்கு மியான் கடை ஆட்கள், அங்கு டீ குடிக்கும் ஆட்கள், அதனருகில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சி.டி.பி.க்கு சென்று வரும் ஆட்கள் இப்படி ஓரளவு ஆட்கள் நடமாட்டம் இருக்கும் போது நடந்துள்ள இத்திருட்டில் ஏதோ உள்குத்து இருக்குமோ! மக்களே உஷார்.
    - கருத்து கப்பமாமா

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8 மே, 2008 அன்று 1:50 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜிஊன்.


    ((இத்தகைய திருட்டு பரங்கிப்பேட்டையில் அறிதான ஒன்று என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படித்தியுள்ளது))

    என்று எழுதியுள்ளதில் "அறிதான" என்றால், அறியப்பட்ட என்ற அர்த்தம் வருகிறதே. "அபூர்வமான" என்ற கருத்தில் என்றால் "அரிதான" என்றல்லவா எழுதவேண்டும், படிப்பாளியே..

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா8 மே, 2008 அன்று 3:57 PM

    Arithanathu means rare.

    பதிலளிநீக்கு
  5. Hello Abu Ahmad,
    Your proficiency is highly laudable. There is a saying "Slip of the tounge is no fault of the mind". I think on the benefit of such doubt we can acquit the writer for "Aridaana".

    Jawad H

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12 மே, 2008 அன்று 3:39 PM

    Jawad Bhai,

    No doubt, it might be a slip of the tounge/finger. And let us give the the benefit of doubt to the writer. But here the doubt raises again as Why the writer is not correcting it yet?

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12 மே, 2008 அன்று 10:24 PM

    Appaada,

    Thank u sir(s) - for correcting!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா22 மே, 2008 அன்று 9:10 PM

    police making sairon all the night time (to distrab all people those are sleeping) i dont know for what he makking( kuthu govindan before now there is one old man )

    mama tholai thangamudiyala.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...