பரங்கிப்பேட்டை நகரில் இடியோசை - மின்னல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை மட்டும் பெய்து வந்த சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது. இன்று காலை முதல் பழுது நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தும், நகரில் மின்வினியோகம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 27 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக