பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 8 மார்ச், 2011

தமிழக அரசியலில், காங்கிரஸ் - தி.மு.க இடையே ஏற்பட்ட தொகுதி எண்ணிக்கை

உள்ளிட்ட மோதல்களுக்கு முடிவு காணும் விதமாக இன்று பகல் 12 மணியளவில்

63 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட இருக்கிறது, காங்கிரஸ் கட்சி சார்பில்

அஹமது படேல் டில்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்னைக்கு

அனுப்புகிறார் என்று டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை

செய்தியாளர் தெரிவிக்கிறார்.

3 கருத்துரைகள்!:

மதுரை மனோ சொன்னது…

இந்தச் செய்தியை மதியம் இண்ட்லியில் நீங்கள் இணைத்தபோதே பார்த்தேன். விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட செய்தியென்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை 7 மணிக்கு பிறகே பிரபல மீடியாக்கள் அனைத்தும் உங்களின் செய்தியை ஊர்ஜிதம் செய்து 63 தொகுதிகள் என்று வெளியிட்டது. அதன்பிறகு மீண்டும் இண்ட்லியிலிருந்து இந்த சுட்டியை தேடி பிடித்து மறுபடியும் படித்தேன். சாதாரண ஒரு வலைப்பூ எப்படி முன்கூட்டியே இவ்வளவு தெளிவாக சொல்லமுடிந்தது? அப்படியே மற்ற பழைய புதிய பதிவுகளையும் பார்த்தேன். நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

விமர்சகன் சொன்னது…

மானங்கெட்ட கருணாநிதி அன்று கேட்பதெல்லாம் கொடுக்க முடியுமா என்று கேள்வி கேட்டாரே...இப்போது எபடி கொடுத்தான்
பொது மக்களே,திமுக வினரே சிந்தியுங்கள்.இந்த கருணாநிதி தன் குடும்பத்தை சி.பி.ஐ பிடியில் சிக்காமல் இருக்க போட்டு பாத்த நாடகம் இது.திமுக விலகும் என்றவுடன் காங்கிரஸ் அலறி அடித்து வரும் என்று நினைத்து "சாணக்கியதனம்" செய்வதாக நினைத்து சாணியை அள்ளி தலையில் கொட்டிக் கொண்டான் இந்த மஞ்சள்துண்டு மானங்கெட்ட கருணாநிதி .

உண்மை சொன்னது…

விமர்சகன் சொனந்து உன்மையேதான் ஜீனியர் விகடனிலும் இதுவே வந்திருகிரது


///நிஜமாகவே தொகுதி பங்கீடு மட்டும்தானா பிரச்னை?''

''உம்ம கேள்வி நியாயமானது! ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்​வரூபம் எடுத்து வளையம் வருவது அனைவரும் அறிந்தது. மார்ச் 31-ம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யப்போகிறது சி.பி.ஐ. இதுவரை 63 நிறுவனங்​​களின் உரிமையாளர்கள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ராசாவின் உறவினர்கள், பினாமிகள், நண்பர்கள் என்று சொல்லப்படும் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் தரப்பு வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். குற்றப் பத்திரிகையின் நகலை உச்ச நீதிமன்றம் படித்து சரிபார்த்த பிறகுதான் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். இந்த வாக்குமூல வரிசையில் மூன்று தமிழக நபர்களை இணைத்தாக வேண்டி வரும் என்று சி.பி.ஐ. நினைக்கிறது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர்தான் அந்த மூவர்!''

''அது தி.மு.க-வுக்கும் தெரிந்துவிட்டதாக்கும்!''

''ம்... அதுதான் நிலைகொள்ளாமல் தவிக்கவைத்ததாம். கைதாகி சிறையில் இருக்கும் ஷாகித் பால்வா நிறுவனத்தின் பணம் 'கலைஞர் டி.வி’-யில் முதலீடு செய்யப்பட்டதன் பின்னணியை விசாரிப்பதற்காக... தயாளு அம்மாளையும், வோல்டாஸ் நிறுவனம் கைமாறியது தொடர்பாக ராஜாத்தி அம்மாளையும்... ஸ்பெக்ட்ரம் தொடர்பான சில கேள்விகளுக்காக கனிமொழியையும் குறைந்தபட்ச கேள்விகளுடன் விசாரிக்க வேண்டி வரும் என்பதை சி.பி.ஐ. தரப்பு மூலமாக காங்கிரஸ் ரூட்டில் சிலர் தி.மு.க-விடம் சொன்னார்களாம். 'கலைஞர்' டி.வி-யின் முக்கியப் பொறுப்பாளர் சரத்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடித்துவிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 15-ம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக கனிமொழிக்கும்... மார்ச் 19-ம் தேதி ஆஜராக ராஜாத்தி அம்மாளுக்கும் சி.பி.ஐ. சம்மன்கள் தயாராகிவிட்டதாகவும் பேச்சு. கருணாநிதியைக் கொந்தளிக்கவைத்தது இதெல்லாம்தான். 'ராசா, மந்திரி பதவியை ராஜினாமா செய்தால் போதும்னு ஆரம்பிச்சாங்க. அப்புறமா, கைது பண்ணினாங்க. கலைஞர் டி.வி-க்கு ரெய்டு வந்தாங்க. அப்புறம், நம்ம குடும்பத்தினரையே விசாரணைக்கு கூப்பிடுவாங்களா?’ என்று பெரிய குடும்பத்துப் புள்ளிகள் கொதித்து விட்டார்களாம். டெல்லியில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வந்த குலாம் நபியிடம் கருணாநிதி இது சம்பந்தமாகப் பேசியதாகவும்... 'ஐயோ! அவை எல்லாம் சி.பி.ஐ. கையாளும் காரியங்கள். அது எங்களுடைய அதிகார எல்லைக்குள் வராது. அதில் நாம் தலையிட்டால், சுப்ரீம் கோர்ட்டோ, கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் எதிர்க்கட்சிகளோ சும்மா விடாது’ என்று அவர் கையை விரித்ததாகவும் தகவல். ஆ.ராசாவை என்.எஸ்.ஏ. சட்டப்படி கைதுசெய்யப் போவதாக அடுத்து ஒரு தகவலும் கருணாநிதியை எட்டி, அவரது கோபத்தை அதிகப்படுத்தியதாம்...''

''தி.மு.க. ஆலோசனைக் குழுவுக்கு முன்னதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு டெல்லி ரியாக்ஷன் என்னவாம்?////

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234