திங்கள், 9 மே, 2011

பற்றியெறியும் வத்தக்கரை: கட்டுக்கடங்காத பயங்கர தீ விபத்து!

 பரங்கிப்பேட்டை: இன்று பகல் சுமார் 12 மணிக்கு வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோயிலில் உள்ள மீன் விற்பனை மற்றும் கிடங்கு வளாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. அது மளமளவென்று கட்டுக்கடங்காமல் காட்டுத்தீப் போல் வளாகத்தில் உள்ள அனைத்து கிடங்கு மற்றும் விறபனை நிலையத்திற்கும் பரவியது. நகரத்திலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை வான் நோக்கிப் பார்த்தால் வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது போன்று ஒரு பயங்கர-பிரமாண்ட தீ விபத்தை இதற்கு முன் பரங்கிப்பேட்டையில் நிகழ்ந்திருக்கிறதா என தெரியிவில்லை. கடல்வாழ் உயிரியல் கல்லூரியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மக்கள் வழியெங்கும் நின்று கொண்டு வேடிக்கை பாத்தனர்.



தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டும் நிலைமையை கட்டுப்படத்த நேரம் பிடித்தது. பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் கடுமையாக போரடினர். பேரூராட்சித் தலைவர், வட்டாட்சியர், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர்.


குளிரூட்டிகளில் அடைத்து வைக்கபட்ட பல லட்ச மதிப்பள்ள மீன்கள், ஸ்டோரேஜ்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் மட்டுமின்றி கணக்கிலடங்காத பொருட்கள் தீக்கு இரையாயின. சில கேஸ் சிலிண்டர்களும் வெடித்தன.  இன்னும் இதுவரை சேத மதிப்பீடு தெரியவில்லை.

3 கருத்துகள்:

  1. வத்தக்ரைல சில நாலா பிரசச்னயா இருக்கு அதனால இது விபத்தா சதியா விசாறன பன்னுனாதான் தெரியும்,

    பதிலளிநீக்கு
  2. மிஸ்டர் ஓற்றன் அவர்களே,நீங்க துப்பறிவதாக நினைத்து எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் எதையாவது சொல்லிடாதிங்க.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் பொருமையை தந்தருளவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. மிஸ்டர் ஹம்துன் அஷ்ரப் அவர்களே,நா என்னெயும் ஊத்துல டீசலும் ஊத்தல இங்க வந்த நியுச மட்டும் பாக்காம மத்த எடங்கலையும் விசாரிச்சு பாருங்க மத்த பேப்பர் நியுசவும் பாருங்க இது சம்பந்தமா வத்தக்கர மீன் வியாபாரிகல் சங்கதலைவரு நாலு பேர் மெல கம்ப்லெண்ட் பன்னி இருக்காரு...அப்ப அவரு என்னாத்த ஊத்துனாதா சொல்வீங்க

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...