திங்கள், 9 மே, 2011

பிளஸ்-2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண் பெற்று முதலிடம்

ஓசூர்: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி ரேகா 1200-க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம்:- தமிழ்-195 ஆங்கிலம்-195 இயற்பியல்-200 வேதியியல்-200 உயிரியல்-200 கணிதம்-200 மொத்தம்-1190

மாணவி ரேகாவின் தந்தை கேசவன். தனியார் கம்பெனி அதிகாரி, தாய் மலர்விழி. இவர் ஆவலப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் ஓசூர்-பாகலூர் ரோட்டில் வசித்து வருகின்றனர். கிருத்திகா என்ற தங்கை உள்ளார். இவர் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா 10-ம் வகுப்பு படித்தபோது 479 மதிப்பெண்கள் எடுத்து ஓசூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். சக மாணவிகள் அவரை தூக்கி கொண்டு பள்ளியை சுற்றி ஊர்வலமாக வந்து உற்சாகமாக கொண்டாடினர்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இடைவிடாமல் தொடர்ந்து படித்தேன், எனக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் உதவி செய்தனர். நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றது சந்தோசமாக இருக்கிறது.

நான் டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன். மற்ற மாணவிகளை போலவே நானும் படித்தேன். பாடத்தை புரிந்து கொண்டு படித்ததால் நான் இந்த சாதனையை படைத்தேன்.

இதற்காக நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை, எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

200க்கு 200 எடுத்த மாணவர்கள் விபரம்

உயிரியல் 615 பேர்
தாவரவியல் 4 பேர்
கணிதம் 2720 பேர்
வேதியியல் 1243 பேர்
இயற்பியல் 646 பேர்
கணித அறிவியல் 223 பேர்
விலங்கியலில் யாரும் 200 ரன் மார்க் எடுக்கவில்லை.

1 கருத்து:

  1. கருத்தாளன்9 மே, 2011 அன்று 12:41 PM

    தமிழை முதற்பாடமாக படித்ததினால் மாணவி ரேகா(1190) மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.அதிக மதிப்பெண் என்னும் வகையில் சென்னை மாணவி சந்தியா(1191)வே முதலிடம்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...