பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளி மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அப்துல் காதர் (அதிராம்பட்டினம்) பெண்கல்வியின் அவசியத்ததையும் இஸ்லாம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதையும் சினிமா-சீரியல், ஆட்டம்-பாட்டத்தை கடுமையாக விமர்சித்தும் பேசியது சிறப்பம்சமாக இருந்தது. கடைசியில் இவரின் தலைமையிலேயே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகள் சினிமா பாடல்களுக்கு அரங்கு அதிர ஆட்டம்-பாட்டம் போட்டனர். ஆண்டுவிழாக்கள் என்றாலே அரங்கு அதிர ஆட்டம் போட்டுத்தான் மாணவ-மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிகொணர வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் இந்தத் திறமைகளை(?) காண பெற்றோர்கள் இரவு 9.30 மணி வரை காத்திருந்து ரசித்ததுதான் வேதனை.
ஞாயிறு, 2 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
சாட்டை அடியான பதிவு.
பதிலளிநீக்குஆட்டம் பாட்டங்கள் மாணவ மாணவிகளின் திறமையை கடுகளவும் வளர்க்காது. மாறாக கீழ்த்தரமான கலாச்சார வாடையைத் தான் வளர்க்கும். ஆஸ்த்ரேலிய ஸ்கூல் நிச்சயம் இதை தவிர்க்க வேண்டும்.
பள்ளி ஆண்டு விழாவில் குழந்தைகள் ஆடுவதும் பாடுவதும் அதைக் கண்டு அனைவரும் மகிழ்வதும் தவறு ஒன்றுமில்லை. ஆடல், பாடல்களின் மூலம் குழந்தைகளின் கவனம், உடல் வலு, நேர கவனம் போன்ற பல திறன்கள் மேம்படும். ஆபாச வரிகளை கொண்ட திரைப் பாடல்களை தவிர்த்து நல்ல சிந்தனை வளர்க்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து தருவது ஆசிரியர் கடமை.
பதிலளிநீக்குமூனா பள்ளி சிறப்படைய வாழ்த்தும்
முன்னாள் முதல்வர்
கோ.சு.வீரராகவன்