(கேடயக்குறிப்பு:பலரும் இச்செய்தியினை அறிந்திருக்கலாம்; செயற்பட்டிருக்கலாம், எனினும் அறியாதவர்களை கருத்தில் கொண்டே இங்கு தகவலாக வெளியிடப்படுகிறது)
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அவர்கள் இந்த ஆண்டு கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் வரும் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். பிறகு பூர்த்தி செய்து அந்த பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும்.
கடந்த மார்ச் 2008ல் தேர்வு எழுதாமல் முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடக்கிறது.
தேர்வு அட்டவணை விவரம் :23ஆம் தேதி காலை தமிழ் முதல் தாள்.
24ஆம் தேதி காலை தமிழ் 2-வது தாள்.
25ஆம் தேதி காலை ஆங்கிலம் முதல் தாள்.
26ஆம் தேதி காலை ஆங்கிலம் 2-வது தாள்.
27ஆம் தேதி காலை இயற்பியல், வணிகவியல்.
மாலை உளவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம்சுருக்கெழுத்து.
28ஆம் தேதி காலை வேதியியல், பொருளாதாரம்.
30ஆம் தேதி காலை கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல்.
மாலை அடிப்படை அறிவியல், புவியியல்.
ஜூலை 1ஆம் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல்.
மாலை தொழில் பாடங்கள்.
2ஆம் தேதி காலை உயிரி வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், அரசியல் அறிவியல்.
மாலை மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ்
3ஆம் தேதி காலை வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ்.
மாலை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், மனை அறிவியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்).
"Our greatest glory is not in never falling; but in raising every time we fall"
-Oliver Goldsmith
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக