'கைரே உம்மத்' - சிறந்த சமுதாயம் எனும் உயர்நிலையிலிருந்து தடம் புரண்டு முத்திரை குத்தும் சமுதாயமாக மாறிவிட்டோமோ என்கிற திகில் மனதை வாட்டுகிறது.
ஏகத்துவக் கொள்கையைக் கொஞ்சம் அழுத்தமாக ஒருவர் எடுத்துரைத்தால் உடனே முத்திரை குத்தப்படுகிறது - 'தவ்ஹீத்வாதி'மறுமையை நினைவுகூரும் வகையில் மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்வது கூடும் என்று ஒருவர் பேசினால் உடனே முத்திரை குத்தப்படுகிறது - 'தர்கா பார்ட்டி அல்லது 'குராஃபி'
தர்காக்களில் நடைபெறும் அநாச்சாரங்களைக் கண்டித்து ஒருவர் பேசினால் அவர் மீது விழும் முத்திரை - 'வஹ்ஹாபி'
நேர்வழியில் சென்ற முன்னோர்கள் வழியில்தான் நடைபோட வேண்டுமென்று ஒருவர் எடுத்துரைத்தால் பாய்ந்து வருகிறது முத்திரை - 'ஸலஃபி'
பிரிவுப் பெயர்களின் அடிப்படையில் செயலாற்றுவது தவறு என்று பிரச்சாரம் செய்தால் அவருக்குக் குத்தப்படும் முத்திரை - 'நஜாத்துக்காரர்'
கண்ணை மூடிக்கொண்டு இமாம்களையோ, மத்ஹபுகளையோ பின்பற்றாதீர்கள் என்று ஒருவர் அறிவுப்பூர்வமாகப் பேசினால் கூட அவருக்கும் முத்திரை குத்தப்படும் - 'அஹ்லே ஹதீஸ்'
இறைவன் நமக்களித்த முத்திரையான 'முஸ்லிம்' என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்??????
கருத்துதவி : 'சமரசம்' இதழ் -சின்னச் சின்ன மின்னல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக