மக்கள் புரட்சியே வழி.
மருத்துவமனையின் அவசியத்தையும், கல்விச்சாலையின் அவசியத்தையும் உணராத அரசியல்வாதிகளுக்காக காத்துகிடப்பதென்பது மருத்துவத்துக்கும் - கல்விக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும்.
இதே நிலை தொடர்ந்தால் உயிர்காக்க கட்டப்பட்ட மருத்துவமனை நாளை பிணக்கிடங்காகத்தான் மாறும்.
கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், மனுக்கள், அரசியல்வாதிகளின் சந்திப்புகள் போன்றவற்றால் சாதிக்க முடியாதவைகளை மக்கள் புரட்சி சாதித்துக் காட்டும்.
உள்ளுரில் இருக்கும் அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள் அவரவர்கள் பகுதி மக்களை நிலைமையை எடுத்துக் கூறி திரட்டட்டும். அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்கள் ஒன்று திரண்டு மக்களை தட்டி எழுப்பினால் - மக்கள் ஒன்று திரண்டு முட்லூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டால் - சில மணிநேர பஸ் போக்குவரத்து தடைப்பட்டால் - மக்கள் அவதியின் கோலங்கள் அரசு அதிகாரத்தை தட்டினால் - வெகு விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும்.
அண்ணாச்சி சொல்ற ஒங்களுக்கும், படிக்குற எங்களுக்கும் இது ஈசி. ஆனா இதெல்லாம் களத்துல நின்னு செய்ற வேல. ஊருக்குள்ள இருந்து இத senji காட்டனும்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் ஜி.என்.
பதிலளிநீக்குஅரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனமில்லை. நம் தேவைகளுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் ஓட்டு பொறுக்க வரும்போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் காற்றோடு கலந்துபோய் மாயமாய் மறைந்து போகும் அதிசயம் நம் நாட்டை தவிர வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை.
தங்களின் கட்சிக்காக, பேரும் புகழும் தேடும் அரசியல்வாதிகள் கொஞ்சமேனும் தன் நகர மக்களின் வாழ்வையும், அவர்களின் கஷ்டங்களையும் யோசித்து பார்த்தால் ஏதாவது நல்லது செய்ய முன்வருவார்கள்.
நம் ஊர் அரசியல்வாதிகளின் பெண்பிள்ளைகள் படிக்க இந்த பள்ளிக்கூடத்தை நாடித்தான் வரவேண்டும். தங்கள் கட்சியின் பள்ளிக்கூடத்திற்கோ, தலைவரின் பள்ளிக்கூடத்திற்கோ செல்ல முடியாது.
உடல்நிலை சரியில்லாமல் போனால் இந்த ஆஸ்பத்திரிக்குத்தான் வரவேண்டும். கட்சித்தலைவரின் ஆஸ்பிட்டலுக்கு செல்ல முடியாது.
இன்னும் சொல்லபோனால் நம்மூர் அரசியல்வாதிகள் செத்தால் இங்குதான் ஊர்வலம் நடத்த வேண்டுமே தவிர வேறு எங்கு நடத்த முடியும். அதிலும் இந்த நகர மக்கள்தான் கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் கட்சி சார்பாக மலர் வளையம் கிடைக்கும்.
அதனால், நம்மூர் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் மக்கள் புரட்சிதான் ஒரே வழி!
ஆனால் ஒரு மில்லியன் டாலர் (!) கேள்வி:
இந்த புரட்சி, போராட்டம் போன்றவற்றிற்கு நம் மக்கள் தயாரா?
அவர்களும் அரசியல்வாதிகளை போன்று எது நடந்தால் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா?
அதிமுக-என்னசெய்வது நாங்கல் இங்கு இருந்தலும் அங்கு இல்லயெ!
பதிலளிநீக்குதிமுக -என்னசெய்வது நாங்கள் அங்கு இருந்தலும் இங்கு இல்லயெ!
நாங்கள் இங்கும் (அங்கும்)மலர்ந்திருந்தல் ஒரெகிழியாய் கிழித்திருப்போம்!
sari nan thayaraga irukiren yen edral enaku en oor makkal en oor nalan pera na romba aavalaga irukiren aagave eppoludhu vendumanalum eenai koopidungal nam makal anaivarum serrndhu poratam nadathi namma ooruku nal vazhi kondu varuom
பதிலளிநீக்கு[ennoda chinna karuthu indha poratthirku sila nal vazhu sangam moolam eduthu solli oru periya makkal kootathai thiratti nam otrumaiyai kaamithu vetri pera vendum enbadhu ennoda aasai] assalamu alaikum by urs loving riyaz.........
தட்டினால் மட்டுமே திறக்கப்படும்...பிடுங்கினால் மட்டுமே கிடைக்கப்பெறும் என்ற நிலை இருந்தால் அதை செயல் படுத்துவதே சிறந்ததாகும்.
பதிலளிநீக்குTo get some thing good, we dont need to do some thing bad. If we do a road block to achieve our targets, what will be the status of passengers travelling on the buses. They might be infants, school kids, pregnant womens, aged men and womens, workers. Do all of them have to suffer for our problem? Please think once again...
பதிலளிநீக்குஇரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஒன்று: "சுடர் said...
அண்ணாச்சி சொல்ற ஒங்களுக்கும், படிக்குற எங்களுக்கும் இது ஈசி. ஆனா இதெல்லாம் களத்துல நின்னு செய்ற வேல. ஊருக்குள்ள இருந்து இத senji காட்டனும்.
July 10, 2008 1:09 PM"
தனிமனிதர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை விட பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்துகளுக்கு கூடுதல் அதிகாரத்தை இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ளது. உறுப்பினர்களே இல்லாத அமைப்புகளாக இருந்தாலும் சரி அதன் பதிவுக்கும் மதிப்புள்ளது என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தனி மனிதர்களாக இருந்து நீங்களும் நானும் செய்ய முடியாததை மேல் குறிப்பிட்டவர்களால் செய்ய முடியும்.
பரங்கிப்பேட்டையில் நல்வாழ்வு அமைப்புகள், கல்வி அமைப்புகள், வணிக அமைப்புகள், இயக்கங்கள், பொதுஜமாஅத், அரிமா சங்கம், இன்னபிற தனி பஞ்சாயத், கூடுதல் அதிகாரம் பெற்ற பஞ்சாயத் அமைப்பு என்று ஏராளமாக உள்ளன. இந்த அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேசி போராட்ட வியூகம் வகுத்தாலே போதும். இந்த பதிவு அமைப்புகள் ஒன்று கூடி முயற்சித்தால் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களைக் கூட திரட்டிவிட முடியும். இத்தகைய முயற்சிக்கு கம்யுனிஸ்ட் மற்றும் மகஇக தோழர்களின் ஆதரவும் கிடைக்கும். இதையே மக்கள் புரட்சி என்று நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இரண்டு: LUKMAAN said...
To get some thing good, we dont need to do some thing bad. If we do a road block to achieve our targets, what will be the status of passengers travelling on the buses. They might be infants, school kids, pregnant womens, aged men and womens, workers. Do all of them have to suffer for our problem? Please think once again...
July 15, 2008 9:53 AM
ரோடு முற்றுகையிடப்படும் போது பிரயாணத்தில் (பஸ்ஸில்) இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது மனிதாபிமானம் நிறைந்த சிந்தனைத்தான். நாமும் இதை மறுக்கவில்லை. ஆனால் இரண்டு தீமைகள் நடக்கும் போது இரண்டில் எது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்து நாமே சில நேரம் சில பாதிப்பை அனுமதிப்போம்.
கையில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு டாக்டர் "கையை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இது உடல் முழுவதையும் பாதிக்கும் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்" இப்போது கையை எடுப்பதும் பாதிப்புதான். இந்த பாதிப்பை நாம் அனுமதிக்கவில்லை என்றால் இதை விட பெரிய பாதிப்பான உயிர் பிரச்சனை வந்து விடும். இரண்டையும் ஒப்பிடும் போது மனம் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கையை எடுக்க நாம் அனுமதிப்போம். அதுபோன்ற பிரச்சனைத்தான் இதுவும்.
பஸ் மறியல் போன்றவற்றால் சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அந்த பாதிப்பு சில மணிநேரங்களில் சரி செய்யப்பட்டு விடும். ஆனால் மருத்துவமனை திறக்காமலிருப்பதன் பாதிப்பு ஆண்டுகளாக நீடித்து பல உயிர்களை சூறையாடிக்கொண்டிருக்கும் - ஏழைகளுக்கு நோய்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்பாகும். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் எழுதியதின் அர்த்தம் புரியும்.
மருத்துவமனைக்காக இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பஸ் மறியலில் ஈடுபடப் போகிறார்கள் என்று வால் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி விட்டு செய்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாதிப்புகளையும் ஓரளவு குறைத்து விடலாம். ஏனெனில் அந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்து விடும்.
நண்பர் ஜீ.என்,
பதிலளிநீக்குசகோ.லுக்மான் அவர்களின் கருத்தே சரியாகத் தெரிகிறது.
மருத்துவமனை விரைவாகத் திறக்கப்படத்தான் வேண்டும். அதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படத்தான் வேண்டும் என்பதில் எனக்கும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், அதற்காக பிறமனித உயிருடைமைகளுக்கு பங்கம் விளைவிக்கிற சாலை மறியல் போன்ற செய்கைகளை சரிகாண இயலாது. நியாயப்படுத்தவும் இயலாது.
(கையா, உயிரா போன்ற உதாரணங்களில் அவை முடிவினை தன்னிடத்தில் வைத்திருக்கும் ஒரே ஆளுக்குரியதாக இருக்கின்றன..எனவே சாலை மறியல், பிறமனிதம் பாதிப்பு என்று வரும்போது அவை சரியாகப் பொருந்தவில்லை)
சாலைமறியலை விட்டால் வேறுவழியே இல்லையா என்ன!
குறிப்பிட்ட அரசு அலுவலக முற்றுகை; குறிப்பிட்ட அமைச்ச/அதிகாரிகளை வலியுறுத்துதல் என்பன போன்ற வேறுவழிகளின் கதவுகள் இன்னமும் அடைபடவில்லை என்றே நினைக்கிறேன்.