

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் 01.08.2008 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பீத்தர் தெரு, எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். முகாமில்
இரத்தஅழுத்தம் நோய், நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் குறித்த சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மற்றும் இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், ஈ.சி.ஜி., ஸ்கேன் மற்றும் கண்புரை பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவகால உதவித்தொகை வழங்கப்பட்டது.
மக்களுக்கு மிகவும் பயனளித்த இந்த முகாம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் சார்பாக இந்த ஆண்டு நடந்த 4வது முகாமாகும்.
It could give you more facts.
பதிலளிநீக்கு