புதன், 17 செப்டம்பர், 2008

ICICI திவால் வதந்தி: லேட்டஸ்ட் அப்டேட்.

* வங்கி திவால் ஆகிவிட்டதாக ஏற்பட்ட புரளியால் கச்சேரி தெரு விழாகோலம் கட்டியது.
* இன்று மட்டும் 3 முறை ATM-ல் பணம் நிரப்பட்டது.
* கையிருப்பு தீர்ந்தும் 3 முறை பணம் பெறப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.
* இரவு 8.30 மணி வரையிலும் தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து செல்கின்றனர்.
* நாளை காலை 7.30 மணிக்கு வங்கி திறக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
* இன்று மடடும் தோரயமாக 3 கோடிக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டதாக வங்கி வட்டாரம் தெரிவிக்கிறது.
* இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.
* இது வதந்தி என்று ஓரளவு எல்லோருக்கும் தெரிந்திருந்தும் மக்கள் (குறிப்பாக பெண்கள்) முற்றுகையிட்டவாறே உள்ளனர்.

குறிப்பு: இந்த வதந்தியானது பரங்கிப்பேட்டை மற்றும் ஓரிரண்டு ஊர்களில் மட்டுமே பரவியது.

1 கருத்து:

  1. உண்மையோ அல்லது வதந்தயோ எதுவாக இருப்பினும் நமது சமுதாய மக்கள் அதுவும் குறிப்பாக நம் பெண்கள் கூட்டம்,கூட்டம்மாக திரும்ப பெற்ற பணத்தை செய்வது அரியாது பல லட்சங்களை கையில் வைத்துள்ளனர்,இன்று இரவு நலமாக கழிய வேண்டும்.நாளை பாதுகாப்பாக அரசு வங்கியில் செலுத்த வேண்டும்.இதற்கிடையில் நமது பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட வேண்டும்.ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கை உண்டா?விபரம் தெரிவித்தால் நலமாகவும்,நிம்மதியாகவும் இருக்கும்.விபரம் கிடைக்குமா? ஆவலுடன்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...