புதன், 26 நவம்பர், 2008

வரலாறு காணாத மழை

தொடர் கனமழையாலும், வீசிக் கொண்டிருக்கும் கடும் காற்றாலும் பரங்கிப்பேட்டை மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.

ஆங்காங்கே மின் கம்பங்கள் அறுந்து விழுந்து கிடப்பதால் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுப்பள்ளியின் உள்ளே (தொழும் இடங்களில்) தண்ணீர் புகுந்து விட்டது. குளத்தின் மீன்கள் உட்பட பள்ளியின் உள்ளே உலா வருவதாக தகவல். தண்ணீர் வெளியேறாத வரை தொழ முடியாது என்ற அளவிற்கு பாதிப்பு.

வேருடன் பிடுங்கி சாய்க்கப்பட்ட மரங்கள் பரங்கிப்பேட்டை எங்கும் காணப்படுகின்றன.

ஐக்கிய ஜமாஅத் தலைவரும் - பேருராட்சித் தலைவருமான யூனுஸ்நானா மீட்புக் குழுவுடன் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்.

தொகுதி எம் எல் ஏ சகோதரி செல்வி ராமஜெயம் உள்ளுரில் இருந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் பொதுஜனத்திடம் வந்து விட்டது.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நமது ஊரில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை புகை படங்களுடன் வெளியிட்டதற்கு நன்றி.

    என்னை போல வெளி ஊர்களிலும் வெளி நாடுகளிலும் வாழும் நம் பரங்கிபேட்டை சகோதரர்கள் உங்கள் பூவலை மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள முடிகிறது.

    நன்றி, வஸ்ஸலாம்.
    அலி அப்பாஸ் - கொச்சின், கேரளா.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...