பரங்கிப்பேட்டையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் பாதிப்பிற்கு பிறகு இயல்பு நிலை முழுமையாக திரும்பிவருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரும் வடியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடலூர் பகுதிகளில் விஷக்காய்ச்சல் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
இது பரங்கிப்பேட்டை பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது குறித்து எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. பரங்கிப்பேட்டை பகுதி முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ குழுவும் களத்தில் உள்ளது. எனவே இறையருளால் நமதூர் பகுதியில் நோய் பரவும் ஆபத்து எதுவுமில்லை' என்றார் உறுதியாக.
பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் துவங்கும் என்று முன்பு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று மாலை மாவட்ட கல்வி இயக்கம் திங்கட் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இந்த விடுமுறை நாளையும் தொடர வாய்ப்பு உள்ளது.
திங்கள், 1 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
தலைவர் யூனுஸ் நானா அவர்களின் பேட்டி மக்களின் பயத்தினை போக்கும்விதமாக அமைந்திருந்தது நன்றி
பதிலளிநீக்குபொது மக்கள் குடிநீரை வெண்ணீராக பயண் படுத்தினால் நோய் வருமுன் காக்கலாம்.
அன்புடன்
ஹம்துன் அஷ்ரப்
பரங்கிப்பேட்டை
அஸ்ஸலாமுஅலைக்கும்,பரங்கிபேட்டை.காம் நல்லசேவை தொடரட்டும்,மார்க்கசெய்தி,ஊர்செய்தி,தமிழகசெய்தி,இந்தியசெய்தி,உலகசெய்தி,உடன்க்குஉடனும்,துள்ளியமானசெய்தி கொடுப்பது, மற்றும் புகைபடத்துடன் வழங்குவது, வலைப்பூ அருமை,மற்றும் சுற்றுவட்டார குறிப்பாக சீர்காழி,மையிலாடுதுறை,செய்திகளையும் வழங்கினால் மென்மேலும் சிறப்பாகஇருக்கும்.இறைவன்கிருபையுடன் வாழ்த்துகள்,பாராட்டுகள்.வஸ்ஸலாம் அபுசமிம்-ஜித்தா,சவுதி.
பதிலளிநீக்குஇன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மழை காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறையிலிருந்து மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு திரும்பினர்.
பதிலளிநீக்குassalamu alaikkum.
பதிலளிநீக்குi have extremly happy because of so much website have been launch from our native. This is good for our native youths.i have one comment here, that is ,all webpages(note: our native web pages) have expressed about our native news ,general news , worldwide news. overall what i am trying to say here, all our webpages express mainly news. my question is why dont release some articles about our youths?because in our native so many youngsters have not proper guide.so, plz suggest my request to add some articles .it may help for our future.
vassalam
மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைத்ததா என்பதை அறிய தாருங்கள்.
பதிலளிநீக்கு