2004 டிசம்பர் 26 காலை மனித இன வரலாற்றில் மிகப்பெரும் பேரழிவினை பதிவு செய்தது சுனாமி என்ற ஆழிப்பேரலை. கிட்டத்தட்ட இரண்டரை லட்ச மக்கள் பலியாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை திசைமாற்றிய சுனாமி, இன்றளவும் பயவிழிகளுடன்தான் கவனிக்கப்படுகிறது.
சில நாட்கள் முன்பு அமெரிக்க லேமென் பிரதர்ஸ் திவால் எனும் பூகம்பத்தால் பரவிய மெல்ட் டவுன் சுனாமி பீதி, நமதூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன் நூற்றுக்கணக்கானவர்களை குவித்தது. அன்றும் அதற்க்கடுத்த நாளும் நமதூர் மக்களால் சுமார் 13 கோடிரூபாய்க்கும் மேல் அந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. ஓபன் சீக்ரட் ஆன இந்த விஷயத்திலும் நாம் கற்று கொள்ள விஷயம் உள்ளது.
பூகம்ப அதிர்வுகளால் சற்றே தளும்பிய மகா சமுத்திரத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நமது வீடுகளையும், உடமைகளையும், உயிர்களையும் விழுங்கி திரும்புவதற்கு சில மில்லிமீட்டர் அளவு வித்தியாசங்கள் போதும்.
காலங்காலமாய் ஒரு சாகசக்கதை அளவிற்கு பேசப்படப்போகும் இந்த பேரழிவின் மூலம் அந்த கடலையும், நம்மையும் படைத்த இறைவன் விடுத்த செய்தியினைப்பற்றி நம்மில் எத்தனை பேர் யோசித்திருப்போம்? பேசியிருப்போம்? மீண்டும் பிச்சையிடப்பட்ட நமது உயிரையும், வாழ்க்கையையும் வைத்துக்கொண்டு நாம் என்னதான் செய்து கொண்டு உள்ளோம் ?
சில நாட்கள் முன்பு அமெரிக்க லேமென் பிரதர்ஸ் திவால் எனும் பூகம்பத்தால் பரவிய மெல்ட் டவுன் சுனாமி பீதி, நமதூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன் நூற்றுக்கணக்கானவர்களை குவித்தது. அன்றும் அதற்க்கடுத்த நாளும் நமதூர் மக்களால் சுமார் 13 கோடிரூபாய்க்கும் மேல் அந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. ஓபன் சீக்ரட் ஆன இந்த விஷயத்திலும் நாம் கற்று கொள்ள விஷயம் உள்ளது.
வங்கி பயனாளர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள், அவர்கள் எவ்வளவு ஜகாத் கொடுத்திருப்பார்கள் என்பதையெல்லாம் நமக்கு தெரிந்த ஊர் கணக்கை வைத்து probablityக்கு ( நிகழ்தகவு) தீனியாக போட்டுவிட்டு பார்த்தால் ...... 13 கோடி வேண்டாம்... 10 கோடிக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் ஒரு வருடத்திற்கு என்றால் 5 வருட முடிவில் யாருமே ஜகாத் வாங்க தேவையற்ற நிலைதானே உருவாகி இருக்க வேண்டும்.?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திவால் என்று ஒரே ஒரு பிங்க் ஸிலிப் தனக்கு தானே கொடுத்துக்கொண்டிருந்தால் (மஞ்சள் நோட்டிஸ்) மொத்த பணமும் காந்தி கணக்கில்தானே போயிருக்கும். தன்னுடைய நிலையாமையை அழகாக காட்டிய, - தப்பிபிழைத்த அந்த பணம்- நம்முடைய பணமே என்றாலும் அதில் ஏழைகளுக்கு சேரவேண்டியதாக இறைவன் நிர்ணயித்திருப்பதை கொடுத்திருந்தால் அது தானே நிலையானதாக இருந்திருக்கும்.... நம்மை இல்லாமலேயே செய்திருக்கூடிய சுனாமி....
நாம் இருந்தும் இல்லாமல் ஆக்கியிருக்ககூடிய இன்னொரு சுனாமி
என்று சுனாமிகள் பலவகையாக இருந்தாலும் படிப்பினைகள் எப்போதும் ஒன்றுதான்.
நம்மூர் "பணமக்களின்" சிந்தனையை வலுவாக உலுக்கி எடுக்க வேண்டிய பதிவு இது.
பதிலளிநீக்குமுறையாக ஜகாத் தொகை (அதுபற்றிய அறிவுடன்) நம்மூரில் வெளிவந்தால் சமீபத்திய மழை உட்பட எந்த பாதிப்புக்கும் யாரிடமும் நிதி கோர வேண்டிய தேவையே இல்லாமல் போய் விடும்.
பரங்கிப்பேட்டை முஸ்லிம்களில் ஒருவர் கூட கூரை வீட்டில் வாழவில்லை என்று உலகம் வியப்பில் ஆழும் அளவிற்கு அனைவருக்கும் வீடுகள் உருவாகி விடும்.
"செல்வம்" மண் புழுக்களை விட கேவலமாக நம்மை உருகுலைய செய்து விடும், அதை முறையாக பயன்படுத்தவில்லையென்றால்.
சுனாமி நினைவுக் கூர்வதற்கு மட்டுமல்ல. ஆழிப்பேரலையாய் இறை நினைவு நம் மனதை தாக்கினால் நாம் நம்மை மாற்றிக் கொள்வோம்.
இறைவன் வாய்ப்பளித்துள்ளான் என்பதை விளங்குவோமா நாம்?
நல்ல பதிவு, அபூ பிரின்சஸ்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
சுனாமி சோகங்கள் காலங்கள் நான்கு ஆனாலும் கூட , எக்காலத்திலும் நம் மனதைவிட்டு அழிக்கமுடியாத கோலம்.
பதிலளிநீக்குஆழிப்பேரலை (சுனாமி) வந்தபோது கலங்காதவர்கள் கூட "ஐ.சி.ஐ.சி.ஐ" வங்கி திவால் என்று முன்பு ஊரில் உலா வந்த வதந்திப்பேரலையினால் ஆடித்தான் போனார்கள்.
thank you for the look back in history.........we all pray that we will not and never see the power of allah swt in this form again............for those who lost loved ones only time will heal their pain.............on a more relaxed i thoughout the ICICI incidebt was funny, especially our beloved pno ladies in their ghostly black and white "dupties" queing up to withdrawal money........
பதிலளிநீக்குநாம் நமது ஊரில் சந்தித்த இரண்டு வகை சுனாமிகளை பற்றி வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇவை இரண்டு மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையோ வகை சுனாமிகள் இருக்கின்றன.
அந்த அனைத்து சுனாமிகளிடமுமிருந்தும் நம் அனைவரையும் காப்பாற்றிக்கொள்ள நாம் முயற்சி எடுக்க அல்லாஹ் உதவி செய்வானாக !
அலி அப்பாஸ்,
கொச்சின்.
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஅத்தியாயம்:102
அத்தகாஸீர் - அதிகம் தேடுதல்
1,2 மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தை திருப்பி விட்டது.
3,4 அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்.
5,6 அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தை காண்பீர்கள்.
7 பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள்.
8 பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கபடுவீகள்.
இவ்வாறு வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
A.முஹம்மது இஸ்மாயில்,
துபை.
பாராட்டியே ஆகனும்னு தோனுச்சி, ரியல்லி சுபெர்ப்...
பதிலளிநீக்குஒன்னு இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லைன்னு சொல்லுது.
ரெண்டாவது, நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கைக்கு நம் மக்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து இறைவனுடைய வாழ்க்கை திட்டத்த மறந்து வாழ்கிறார்கள்னு சொல்லுது...
இனியாவது நம் மக்கள் இறைநினைவின் பக்கம் வருவார்களா? அல்லது இன்னொரு சுனாமி தான் வருமா?
Really Nice POST. This post has to each lot of people. Not only parangipettai peoples. And one more thing i noticed in GN's comments "பரங்கிப்பேட்டை முஸ்லிம்களில்". All community poors are in need. not only ...... Hope you can understand....
பதிலளிநீக்குசுனாமிகள் பல வகை,
பதிலளிநீக்குசமுத்திரத்தால் ஏற்பட்ட சுனாமியையும் பங்கு சந்தையினால் ஏற்பட்ட சுனாமியையும் ஒன்றாக கோர்த்து
எழுதப்பட்டவிதம் நன்றாக இருந்தது.
ஹம்துன் அஷ்ரப்
லைலா அஃப்லாஜ்
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குசுனாமியையும் நினைவு கூர்ந்து, ஜகாத்தையும் வலியுறுத்திய தங்கள் பதிவு மிக அருமை.
வஸ்ஸலாம்.
வஜ்ஹுதீன்
yes i agree with novian we are all children of adam and eve
பதிலளிநீக்குமிக கனத்த பதிவு.
பதிலளிநீக்குஇந்த பதிவினை படிக்கும் போது, வட்டி நுழைய முடியாத கிராமம்
என்று அம்மாபட்டினம் (ஜமாலியா ஜனாப் ஹஸனார் அவர்களின் சொந்த ஊர்) பற்றி வார இதழொன்றில் படித்த கட்டுரை நினைவுக்கு வந்ததை தவிர்க்க இயலவில்லை.
சமூக அவலங்களுக்கு எதிரான சாட்டையடிகள் (நண்பர் ஹமீது மரைக்காயர் அவர்கள்) மூலமாக தொடரட்டும்.
அன்புடன்
ஹம்துன் அப்பாஸ்
அல் ஹஸாவிலிருந்து..
// இறைநினைவின் பக்கம் வருவார்களா? அல்லது இன்னொரு சுனாமி தான் வருமா? //
பதிலளிநீக்குஅபு நஜிதா அவர்களே,
இன்னொரு சுனாமி வந்தால் இந்த உலகம் தாங்காது.
இறைநினைவின் பக்கம் வராதவர்களிடம் எடுத்துச்சொல்லுங்கள் இஸ்லாத்தைப்பற்றி அதைவிடுத்து இப்படி (சுனாமி வருமா) விரும்புவது டூ .மச்
*
ஆழிப்பேரலையினால் அநாதையானவர்களை உங்கள் கருத்து வருத்தமடையவே செய்யும்.
இப்போதான் ...காஜா என்பவர் பதித்ததை பார்த்தேன்.....
பதிலளிநீக்கு{ICICI incidebt was funny, especially our beloved pno ladies in their ghostly black and white "dupties" }
{பேய் போன்ற கருப்பில்....aadai.}
parangiyil எல்லாம் பேய்கள் என்று சொல்லபடுகிறதே ....அப்படியா..burkaa podraaho..?
muslim pengalai kelipandra maathiri ulladhu ungal comments.
வார்த்தைய ஒழுங்கா பயன் படுத்த வேண்டுகிறேன்.....
even if it is a way of conveying your thoughts ..please mind your words...
Thank You...
Dear Sultan Abbas
பதிலளிநீக்குI think you are getting your nickers in a twist over nothing.......when I used the word ghostly I used it as a form of expression eg as "white as a ghost"......learn to take some things with an easy relaxed attitude.....happy new year cheers mate......