பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 24 டிசம்பர், 2008

இறைவனுக்கே எல்லாப் புகழும் பெருமையும் ! الحمد لله

அன்பிற்கினிய நேயர்களே! நேற்றுதான் தொடங்கியது போல இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமான முதலாம் ஆண்டுடன் 250ஆம் பதிவையும் நிறைவு செய்கிறோம். 50,000த்தை நெருங்கும் 'நோக்கு'கள்(Hits).

இறையருள் முன்னிற்க, நல்லெண்ண சகோதரர்களாகிய உங்களின் ஆதரவும் அரவணைப்பும் மறக்க இயலாதது.

MYPNO என்கிற இவ்வலைப்பக்கத்தை அதன் பொருளுக்கேற்ப 'என்னுடைய பரங்கிப்பேட்டை' என்றே அனைவரும் உணர்ந்து வந்திருக்கிறீர்கள். நன்றி!

ஊர்ச்செய்திகளுக்கான அர்ப்பணிப்புடனும் தனித்தன்மையுடனும் ஒளிவீசும் இவ்வலைதளத்தில் உடனுக்குடனும், சார்புகளற்றும், விருப்புவெறுப்புகளற்றும், செய்திகளை செய்திகளாகவே தருவதற்கு எங்களால் இயன்ற எல்லாமுயற்சிகளையும் எடுத்துவந்திருக்கிறோம்.

மனிதர்கள் என்பதால் எங்களிலும் பிழைகள் இருக்கலாம்.பிழை மட்டுமே இயல்பு என்றில்லாமல் திருத்திக்கொள்வதே அழகு என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.

ஓர் இனிய நற்செய்தியாக, இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் நாம் வலைப்பூவை தொடர்ந்து சொந்தமாக mypno.com என்கிற சொந்த வலைமனைக்கே குடியேற இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிலே, மிகப்பல புதிய பகுதிகள் உங்களின் இரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்தாய் அமைய உழைக்கிற அதேநேரத்தில்,சமூக அவலங்களுக்கான மருந்தாகவும் எங்கள் மெய்நிகர்களஉழைப்பு (Virtual FieldWork) இடம் பெறவேண்டும் என்பதிலே ஆர்வமும், நேர்மையுங் கொண்டுள்ளோம்.

புதியதாக மலர இருக்கிற நம்முடைய mypno.com/ வலைமனையில், இடம் பெறத் தக்கவை என்று நீங்கள் கருதுகிற சீர்திருத்தங்களையும், நேர்கருத்துகளையும் mypnonews@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தரும்படி வாசகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (தயவுசெய்து பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டாம், அப்படியும் பின்னூட்ட விரும்பினால் அதில் உங்களின் முழுமுகவரியை அளித்தால் மகிழுவோம்).

எதிர்பார்ப்புகளற்ற எங்களின் உழைப்பும் அதன் பயனும் தேக்கமடையாதிருக்க உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், ஊக்கப்பூர்வமான கருத்துகளும், பிரார்த்தனைகளும் நிறையவும் நிறைவாகவும் வேண்டும்,வேண்டும்,வேண்டும்.

.......and miles to go before WE sleep!جزاك الله خيرا

உங்களின் சேவையில்
MYPNO வலைத்தளக் குழு.

8 கருத்துரைகள்!:

ஊர் நண்பன் சொன்னது…

வலைப்பூவின் வளர்ச்சியை சுருக்கமாக விளக்கி, இணையத்தில் குடியேற போகும் இனிப்பான செய்தியை அளித்தமைக்கு நன்றி.

"பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்" என்ற தலைப்புக்கு ஏற்றார்போல வரவிருக்கும் "என்பரங்கிப்பேட்டை" இணையம் அனைத்து அம்சங்களுடனும் முத்திரைப் பதிக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
சகோதரர் M.Gee.ஃபக்ருத்தீன் அவர்களுக்கு என்னுடைய அன்பான
வாழ்த்துக்கள்! MYPNO வலைத்தளக் குழுவின் இடைவிடாத பெரும் முயற்ச்சியின் காரணமாக தொய்வு ஏற்பாடாமல் நம் ஊர் செய்திகளையும் மரண அறிவிப்பு முதல் அதிசிய ஆட்டுக்குட்டி வரை சுவாரஸ்யமாக செய்திகளை வழங்கி நம் ஊர் மக்களால் சுமார் 50 ஆயிரம் முறை இவ்வலை பக்கத்தை திறக்க செய்துள்ளதை பெரிய சாதனையாக சொன்னால் அதுமிகையாகது. தொடரட்டும் நம் ஊர்ச்செய்திகளுக்கான தனிச்சேவை.

"ஊர்ச்செய்திகளுக்கான அர்ப்பணிப்புடனும் தனித்தன்மையுடனும் ஒளிவீசும் இவ்வலைதளத்தில் உடனுக்குடனும், சார்புகளற்றும், விருப்பு வெறுப்புகளற்றும்,செய்திகளை செய்திகளாகவே தருவதற்கு எங்களால் இயன்ற எல்லாமுயற்சிகளையும் எடுத்துவந்திருக்கிறோம்.

மேற்க்கண்ட வரிகளில் தாங்கள் சொன்னது போல செய்திகளை செய்திகளாக சார்புகளற்று வழங்கும் பக்குவமான மனதை அல்லாஹ் தங்களின் MYPNO வலைத்தள குழுவினருக்கு வழங்க வேண்டி எல்லாம் வல்ல நாயனிடம் துவா செய்து வருகிறேன்.மற்றபடி பொது வாழ்க்கையில் புகுந்து விட்டால் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் தானாக வந்துவிடும்.அதை பெரிதுப்படுத்த வேண்டாம்.mypno.com மை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நாம் நாடும் நற்காரியங்களுக்கு அல்லாஹ் துணைபுரிவானக.ஆமீன்.

நஜீர் உபைதுல்லாஹ்

Unknown சொன்னது…

my best wishes and congratulations to all who set up and run this blog...........allah swt bless your service.......truly well done........merry christmas and have a wonderful year ahead......

"i may not agree with what you say but I respect you for your say......" Annon

Vajhi Bhai சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

"பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்" - வலைப்பூ மகத்தான சேவைக்கு பாராட்டுக்கள்.

புதிய இணையமாக உருவாக வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பூவிற்கு முன்பும், பின்பும் பல இணைய சேவைகள் உருபெற்றபோதும், தொடர்ந்து சேவை செய்து, ஊர் மக்கள் அனைவரின் மனதிலும், நீங்காத இடம்பெற்றுவிட்டது இந்த "பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்" - வலைப்பூ

இதற்காக சலிக்காமல் பாடுபட்ட அன்பு நெஞ்சங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், துஆக்கள்.

வஸ்ஸலாம்.
வஜ்ஹுதீன்

மீரா ஜமால் சொன்னது…

பரங்கிப்பேட்டை மாநகருக்கு , முக்கியத்துவம் கொடுத்து இவ்வுரின் முக்கியசெய்திகளை கடல் கடந்து வாழும் நமதூர் அன்பர்களுக்காக "மைபிஎன் ஒ" எனும் வலைப்பூ வழியாக கண்முன் கொண்டுவந்த இந்த வலைப்பூ ஆசிரியர்குழுவினரின் பணி பாராட்டதக்கது.
மேலும் mypno.com வலைமனை யை வருக... வருக....வரவேற்க்கிறேன்.

hajas5000 சொன்னது…

உங்களின் இந்த சீரிய பனி "மைபிஎன் ஒ".காம் மிலும் தொடர வேண்டுகிறேன். கலங்கரை விளக்கம் நமது ஊரின் சிறப்பாக இருந்தாலும் உங்களின் ப்லோக் ஸ்போட் மூலமே நம் கண் முன்னே இன்றும் நிற்கிறது.

அதே படத்துடன் உங்களின் "மைபிஎன் ஒ".காம் தொடர வேண்டுகிறேன்(ஒரு ஓரத்திலாவது). காலத்தால் அழிந்தாலும் , நம் கண்களில் இருந்து அகற்ற முடியாது அல்லவா. ஆல் த பெஸ்ட் .

Syed

Noor Mohamed சொன்னது…

Assalamualaikum…

My Hearties Congratulations to Mypno Blogspot on its first successful anniversary.

As an NRI, I should appreciate your commitment, dedication, trueness and all your efforts put in place to provide up-to-date news and regular updates about our native place.

I wish you all the best and pray Allah to bless you to continue this success.

All praise belongs to Allah.

Noor Mohamed, Abu Dhabi, UAE.

ஹம்துன் அப்பாஸ் சொன்னது…

"தோற்றுபோகவில்லை இஸ்லாமிய இதழியல்" என்ற கருத்திற்க்கு வலுவூட்டும் வகையில் நகரத்தின் செய்திகளிலிருந்து மாவட்ட செய்திகள் வரை இடம் பெறும் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கி முன்னேற்றபாதையில்
பயணிக்கும் எனது mypno.com ஆசிரியர் குழுவினர்களை பாராட்டி
வரவேற்கும் அதேவேளையில் அல்லாஹ் நாடினால் ஒரு நாளிதழாக மலர வேண்டும் என்ற என் போன்ற பலரின் பேரவாவினை நனவாக்கிட தொடர்ந்து முனைப்புடன் பணியாற்றுங்கள்.வெற்றியடைய எல்லாம் வல்ல ஏக இறைவன்
அல்லாஹ் இடம் பிரார்த்திக்கும் நல்ல பல உள்ளங்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.


வாழ்த்துக்களுடன்

ஹம்துன் அப்பாஸ்
அல் ஹஸா-விலிருந்து

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234