சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 அக்டோபர், 2008

2 ஆண்டு சாதனை குறித்து மக்கள் மகிழ்ச்சி - பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் பெருமிதம்

பேரூராட்சி தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்கள் மற்றும் அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கூறினார் தினத்தந்தி 08.10.2008 தேதியிட்ட தொழில் மலரில் (பக்கம் 100) அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி உள்ளார்.
(மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தினை கிளிக் செய்து படிக்கவும்)

ஞாயிறு, 27 ஜூலை, 2008

மிகச் சிறந்த விஞ்ஞானியாக வர ஆசை - பரங்கிப்பேட்டையின் இளம் எழுத்தாளர்கள் விருப்பம்.

எங்கேயும் எப்போதும் சிந்தித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் முஸ்தாக் சமீர், முஹமது அஸ்லம் என்கிற இரு சிறுவர்கள். இந்த சிறு வயதில் பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர்களின் விருப்பம், நோக்கம் எல்லாமே "மிகச் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டுமென்பதே" என்று உறுதிபடக் கூறுகிறார்கள் கோரஸாக.

"குள்ள மனிதர்கள், மர்ம மாளிகை, மஞ்சள் நிலவின் மர்மங்கள்" என்று மர்மக் கதைகளை அதிகமாக எழுதிவரும் முஸ்தாக் சமீர், தன்னுடைய படைப்புகளில் கேடயக் குறிப்பாக (Disclaimer) "இவ்வுலகில் பேய் என்று எதுவுமில்லை, ரசிக்கத்தக்கவை என்பதற்காக மட்டுமே இப்பேய்கதை" என்று அடிகுறிப்பு இடுகிறார்.

புத்திசாலி நண்பர்கள், கண்ணன் ஆசைப்பட்ட சைக்கிள், The Thief (ஆங்கிலம்) என்று தன்னுடைய சிந்தனைகள கதைகளாக தருகிறார் முஹமது அஸ்லம். இவர் தன்னுடைய உற்ற நண்பனான முஸ்தாக் சமீரீனால் உந்தப்பட்டதாக (Inspired) குறிப்பிடுகிறார். இருவரும் சேர்ந்து நரியின் தந்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார்கள்.

ஞாயிறு, 20 ஜூலை, 2008

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை மாணவர்) இரண்டாவது இடம்

மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.

புதன், 19 மார்ச், 2008

ஓர் அரிய சாதனை





நமதூரில் அமைந்திருக்கும் அண்ணாமலை பல்கலைகழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் தற்போது வரலாற்றுச்சிறப்புமிக்க சாதனை புரிந்துள்ளது. இருதய அறுவை சிகிச்சையின் போது ரத்தஉறைதலை தடுக்கும் மிக அரிய, விலைமதிப்பற்ற ஹெப்பாரின் எனும் உயிர்காக்கும் வேதிமருந்தினை சிப்பிகளிலிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றிகண்டுள்ளார்கள். இந்த வகை சிப்பிகள் இந்திய கிழக்கு கடற்கரையோரப்பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. உலகிலேயே இத்தாலியில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த அரிய மருந்து கேன்சர் மற்றும் ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தாகவும் செயல்படும். இது தொடர்பாக அம்மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர். முத்துவேல் ஆறுமுகம் அவர்கள் நமது வலைப்பூவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது ஒரு குழுமுயற்சி என்றும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு. டாக்டர். டி. பாலசுப்பிரமணியன் அவர்களது தலைமையில் எங்கள் குழுவினரின் கடின முயற்சியினால் இது சாத்தியபட்டதாகவும் தெரிவித்தார். இத்தாலியின் ஒபாகிரின் மற்றும் தேசிய உயிரியல் தரம் மற்றும் கட்டுப்பாட்டு மையமும் தங்களது தயாரிப்பினை சோதித்து அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுவாகவே விலை அதிகம் மற்றும் தட்டுப்பாடுள்ள இந்த ஹெப்பாரின் தற்போது நம்மால் மிக குறைந்த விலையில் வழங்க சாத்தியமுள்ளது எனவும், இதன் முழுஅளவு தயாரிப்பு இன்னும் ஒரு வருடத்தில் துவங்கும் என்றும் தெரிவித்தார். இம்மையம் உள்ளூர் மீனவர்களுக்கு அரியவகை அலங்கார மீன் வகைகள ஆராய்ச்சிசாலைகளில் இனவிருத்தி செய்து வழங்குவது போன்ற சமுதாயநலனிலும் கவனம் செலுத்தி வருவது பாராட்டதக்கதாகும்.