வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

எங்கிருந்தாலும் சமூகசேவை ஆற்றுவேன் - சுல்தான் பாஷா உறுதி.

பரங்கிப்பேட்டை வீடுகளில் இறப்பு என ஏற்படும்போது, அவரவர்களின் உற்றார்-உறவினர்களுக்கு சொல்லி அனுப்புவதைவிட முதலில் தகவல் தெரிவிப்பது பரங்கிப்பேட்டையில் முன்மாதிரி இளைஞராக இருக்கும் சுல்தான் பாஷாவிற்குத்தான். அந்த அளவிற்கு சமூக சேவையில் ஆர்வமிக்கவராய் இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்யப்படும் வரை எல்லா வேலைகளிலும் எந்தவித தயக்கமின்றி எந்த பலனுமின்றி சேவை செய்து வந்த இவர், தன் பொருளாதார தேடல் கருதி நேற்று சவூதி அரேபியாவுக்கு பயணமனார்.

அனைத்து தரப்பினருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கும் இவர், பணத்திற்கோ (அ) பொருளுக்கோ ஆசைப்படமால் இறைவனுக்காக பரங்கிப்பேட்டையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சமுதாய-சமூக சேவை புரிந்துள்ளார். மேலும் சில பள்ளிவாசல்களில் நிறைய பொருப்புகளை கவனித்தும் வந்துள்ளார். இச்சேவவையை குறிப்பாக வைத்து பக்கீம்ஜாத் எனப்படும் மக்தூம் அப்பாப் பள்ளியில் ஆடிட்டர் இல்யாஸ் அவர்களின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுல்தான் பாஷாவின் சேவையை கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவரை கௌரவிக்கும் வகையில் MYPNO வலைப்பூ ஏற்பாடுசெய்த விருந்திலும் கலந்துக் கொண்டார். 'எனது பொருளாதார தேவை குறித்து நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், இறைவனுக்காக நான் அங்கேயும் என்னால் முடிந்த அளவிற்கு சமூகப் பணிகளில் இறைவனின் நாட்டத்தோடு ஈடுபடுவேன் என உறுதிபட தெரிவித்தார்.

8 கருத்துகள்:

  1. நண்பர் சுல்தான் பாஷா ஆற்றிய தன்னலம் பாரா சேவைகளுக்கு வல்ல அல்லாஹ் அழகிய நற்கூலி அளித்திட பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. I really appreciate him; I pray Allah for his personal and social life and I wish him all the best.

    பதிலளிநீக்கு
  3. Asslamu Alaikum Warah.,

    May Allah the Almighty bestow his blessing, widen the Rizkh to Mr. Sulthan Basha, and fulfil his needs towards his endeavour. Aameen.

    Jawad H

    பதிலளிநீக்கு
  4. என் தந்தையின் மரணத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த சகோதரர் சுல்தான் பாஷா "உங்க வாப்பா எப்பவும் சொல்லிகிட்டே இருப்பாங்க.. நான் மெளத்தாபோனா நீ தாண்டா குளிப்பாட்டனும் என்று, நல்லவேளையா நான் ஊரிலிருக்கிறேன்" என்று குறிப்பிட்டு கடைசிவரை உடனிருந்தார். நீங்கள் சொல்லியுள்ளது போல ஊரின் அனைத்து தரப்பு மக்களின் செல்லப்பிள்ளைத்தான் அவர்.

    பொருளாதார வழிகாட்டல் இல்லாத நிலைதான் இத்தகைய கண்மணிகளை பரங்கிப்பேட்டை இழக்கின்றது.

    மலர்ந்த முகம், கனிவான பேச்சு, அனைவருடனும் பாகுபாடற்ற பழக்கம், பொதுநலம், எல்லாவற்றிலும் இறை திருப்தி என்ற நல்லக் கொள்கைகளைக் கொண்டு வாழ்ந்து வரும் சகோதரரின் பொருளாதார எண்ணங்கள் நிறைவு பெற வாழ்த்துவோம்.

    நான் ஜுன்னத் மியான் தெருவில் குடி இருந்த சில வருடங்களில் கிடைத்த இளைஞர்களும், அவர்களின் சிறந்த சிந்தனை செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பிட்ட சகோதரர்களில் சுல்தான் பாஷாவும் ஒருவர். அவரை கெளரவித்த வலைப்பூ நிர்வாகிக்கும் பிற சகோதரர்களுக்கும் மிகுந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  5. Assalamu 'alaikum warahmatullahi wabarakatuhu,

    May Allah reward my dear brother in islam Sultan Basha with jannah.

    I love brother Sultan Basha and other muslimins in parangipettai for the sake of Allah.

    May Allah alleviate his financial burdens in this world and make him rich in the hearafter. ameen

    I also ask mypno staff and visitors to remember me in the duas.

    Wassalamu alaykum
    Your brother in islam
    Mosa

    பதிலளிநீக்கு
  6. தம்பி சுல்தான் பாஷாவின் சேவை மதிப்பிடமுடியா கனமானவை.அதன் அளவை அறிந்தவனும்,அதன் கூலியும் ரப்புல்ஆலமினே.

    பதிலளிநீக்கு
  7. சேவை மனப்பான்மைமிக்க சகோதரர் வாழ்வில் அல்லாஹ் அருள் புரிவானாக. அவர் எங்களுடன்தான் இருக்கிறார் இன்னும் அவரின் சேவை மனப்பான்மை வளர நாங்களும் ஊக்குவிப்போம் இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  8. சகோ.சுல்தான்பாஷா அவர்களின் தன்னலமற்ற சமூகசேவை மனப்பான்மை பற்றி அறிந்துள்ளேன்.
    தம் நற்செயல்களில் அவர் இறைப்பொருத்தம் பெறுவாராக.

    அவருடைய ஆர்வமும் நல்லுறுதியும் மிகவும் பாராட்டுக்குரியது.

    இறையருளால், இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர் சிறந்திலங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...