ஜனவரி 1 - ஆங்கில புதிய ஆண்டு பிறப்பு என்றிருந்தாலும், இதை ஏதோ ஒரு வழியில் கொண்டாட்டமாகவே வெகுஜன மக்கள் எண்ணுகிற வேளையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இது கொண்டாட்டமாக ஆர்கெஸ்ட்ரா, வீதி உலாக்கள் என்று நீண்டிருந்தது. புத்தாண்டு முதல் நாளே, அதாவது அன்று இரவே (NewYear Eve) இதன் அடையாளங்கள் தெரிந்துவிடும்.
ஆனால் இந்த புதிய ஆண்டிற்கு, எவ்வித அடையாளமும் காணப்படாமல் இருந்தது. சஞ்சீவிராயர் முனையில் மட்டும் (முன்னால்) மியான் கடையில் லேசான அலங்கார விளக்கோடு Happy New Year என்கிற வாழ்த்து வாசகத்தோடு கூட்டமே இன்றி, இரவு 12 மணி வரை வெறிச்சோடியே காணப்பட்டது.
01-01-2009; 00:00 சரியாக துவங்கியவுடன் ஊரின் பக்கவாட்டுகளிலிருந்து பக்காவாக ஒலித்தது வெடியும் வேட்டு சத்தங்களும். பல்ஸரும், அப்பாச்சிகளும் சரக்-புரக் என்று சிமெண்ட் சாலைகளில் இனம்புரியாத ஓசைகளை எழுப்பியவாறு சோழாவரம் ரேஸ் ஒன்றை நடத்திவிட்டு சென்றது.
அதன் பிறகு மியான் கடையில் டீ விற்பனையும் சூடு பிடித்துக்கொண்டது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி வரை ஊரின் பல முக்கிய வீதிகளில் இளைஞர் பட்டாளம் ஒன்று கார் ஒன்றில் அதன் உள்ளேயும் மேற்கூரையிலும் உட்கார்ந்தவாறு அதிரடி இசை முழங்க, கைத்தட்டல்கள் மற்றும் வெடிகளை வெடித்தவாறு தூக்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியூட்டிவிட்டு சென்றது.
இவர்களை புகைபடமெடுக்க முயன்ற தருணத்தில் சுதாகரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டது.
வியாழன், 1 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
Assalamu 'alaykum,
பதிலளிநீக்குThere are only two eids.
What is there to celebrate when ummah is in major crisis in somalia, falestine, afghan, pakistan, iraq, chechnya and many other places? Muslims are getting killed and no one asks a question.
May Allah destroy the enemies of islam. ameen
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கார் பைக் போன்றவைகளால் வேகமாக சாலைகளில் சென்று இவர்கள் எதை சாதிக்கபோகிறார்கள்? "டாஸ்மார்க்கில்" விற்பனையை அதிகரித்த சாதனையை தவிர.
பதிலளிநீக்குநாம் போகும் பாதை.... சரியில்லையெனில் புத்தாண்டுகொண்டாட்டங்கள் எல்லாம் திண்டாட்டங்களில் தான் முடியும்.
Happy New Year to all in PNO
பதிலளிநீக்குMay 2009 be a happy new year with good health and happiness to all.........dont woryy about the party poppers .............
அன்னிக்கி ராத்திரி முச்சூடும் முழிச்சிருந்து தகவல் குடுத்த தங்கள பாராட்டாமல் இருக்க முடியல...
பதிலளிநீக்கு(நமக்கு செய்தி குடுக்க சாக்குல நீங்களும் புத்தாண்டு ராத்திரியே கொண்டாடுனாப்ல தெரியுது... சும்மா ஜோக்குக்குத்தான்)
இது போன்ற இழி செயல்கள் செய்வதை விட்டும் நம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக... ஆமீன்