காலை சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் தலைமை தாங்கினார். கல்விக்குழு தலைவர் ஹமீது மரைக்காயரின் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என மூன்று அணிகள் மேடையில் வீற்றிருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் அ.பா. கலீல் பாகவியும், ஹமீது மரைக்காயரும்.
'ஏன் சார்... நாங்க தப்பு செய்தா திருத்தாம எங்கள அடிக்கிறீங்க?' என்று மழலை குரலில் சின்ன வாண்டு ஒன்று விவாதத்தில் குரல் எழுப்பியதும் அரங்கம் அதிர கைதட்டல் ஒலித்தது.
இறுதியாக விவாவதங்களுக்குப் பிறகு இறுதியுரையாக ஆசிரியர் இஸ்மாயில் மரைக்காயர் மற்றும் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியில் முடித்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினருக்கும் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியருக்கு பரிசும் வழங்கப்பட்டது.
எங்களை உருப்படுத்திய ஆசிரியர்களை இன்றளவும் நினைத்துப் பார்க்கிறோம்.
பதிலளிநீக்குகல்விக்குழுவின் இத்தகைய சாதனைகள், செயற்திட்டங்கள், தொடர வேண்டும்.
எங்களால் இயன்ற உதவிக்கு உறுதியளிக்கிறோம். வருங்காலங்களில், நல்லாசிரியர் விருது போன்றவைகளையும் பரிசீலிக்கலாம்
"கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு, அதுவுமில்லாவிட்டால் அவர்களுக்கு உதவுபவனாகவாவது இரு- இம்மூன்று நிலையன்றி இருக்காதே" என்ற நபிவழிக்கருத்தில் நடைபோடுகிற ஒரு நல்ல சமுதாயம் மலர்வதற்கு தன் உழைப்பை நல்கும் கல்விக்குழுவுக்கும் தலைவர், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
Masha Allah...
பதிலளிநீக்குValuable effort by the Educational forum and the Majlis.
Let us make it possible every year and can have a get-together to guide the students for specific posts to be applied after their education.
May Allah make guide us.
Antha vaandukku ean vaalthukkal
பதிலளிநீக்கு