வியாழன், 22 ஜனவரி, 2009

செல்வியின் செவ்வி

அதிகாரத்தின் "மை" என்றறியப்பட்ட பச்சை மையினால் தொடர்ந்தாற் போல் பதினைந்தாம் ஆண்டினை நோக்கி கையெழுத்திடும் பெண்மணி, ஆம்...! நீங்கள் யூகித்தது சரிதான் அவர், நமது சட்டமன்ற உறுப்பினர் திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள். இவருக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு, பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்).
நமது வலைதளத்திற்காக செவ்வி (பேட்டி) கேட்டபோது, "அம்மா, பிஸியா இருக்காங்க" "இன்னைக்கி தொகுதி விஸிட் போறாங்க" போன்ற அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கே உரித்தான படாடோபங்கள் இல்லை மாறாக, தானே தேநீர் கொண்டு வந்து நம்மை உபசரித்து இன்முகத்துடனேயே நமது வினாக்களை எதிர் கொண்டார்.


3 கருத்துகள்:

  1. /// புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்)///


    சட்டமன்ற தொகுதி சீரமைப்பின்படி கடலூர் மாவட்டத்தில் "நெல்லிக்குப்பம் மற்றும் மங்களுர்(தனி)" தொகுதிகள் நீக்கப்பட்டு புதிதாக "நெய்வேலி-திட்டக்குடி(தனி)" தொகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நம்ம புவனகிரி தொகுதி அப்படியேதான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மொத்தம் பதிணைந்துலட்சத்து ஆறா ஆயிரத்து நூற்றிப்பத்தொண்பது வாக்காளர்கள் உள்ளனர் இதில் நமது புவனகிரி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர்

    ஆண் வாக்காளர் ; 97 681
    பெண் வாக்காளர் ;93 197
    மொத்த வாக்காளர் ;1 90 878

    பதிலளிநீக்கு
  3. புவனகிரி தொகுதி அப்படியேத்தான் உள்ளது. ஆனால், பரங்கிப்பேட்டைதான் அதில் இல்லை.

    தொகுதி சீரமைப்பின் பிரகாரம் பரங்கிப்பேட்டையை சிதம்பரம் தொகுதியுடன் இணைத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...