விடுதலை சிறுத்தைகள் தலைவர் உண்ணாவிரதம் குறித்து மிகுந்த பரபரப்புடன் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலூருக்கு செல்லும் பேருந்துகள் பத்து பத்தாக போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறது. ஆனாலும் அரசுப் பேருந்துகள் கடலூருக்கு சென்று வர தயக்கம் காட்டி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டையை பொறுத்தவரை, ஒரு சில தனியார் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று காலை 5-பி சிதம்பரம்-சாமியார்பேட்டை பேருந்து சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பின் கண்ணாடிகள் நொறுக்கப்ட்டு பேருந்து நிலையத்தில் கிடக்கிறது.
போராட்டங்களை அற வழியில் நடத்தாமல்,அராஜக வழியில் செயல்பட்டு பொதுமக்களுக்கும் -பொதுசொத்துக்கும் சேதாரம் விளைப்போர் அவர் யாராக இருந்தாலும் தயவு தாட்சணயமின்றி கடும் நடவடிக்கையெடுக்கவேண்டும் . தமிழனுக்காக போராடுவதாக சொல்லி களமிறங்கும் இவர்கள் அதே தமிழனின் சொத்தை சூறையாடுவது இவர்களின் "மனசாட்சிக்கே" முரண்பாடாக தெரியவில்லையா???
போராட்டங்களை அற வழியில் நடத்தாமல்,அராஜக வழியில் செயல்பட்டு பொதுமக்களுக்கும் -பொதுசொத்துக்கும் சேதாரம் விளைப்போர் அவர் யாராக இருந்தாலும் தயவு தாட்சணயமின்றி கடும் நடவடிக்கையெடுக்கவேண்டும் .
பதிலளிநீக்குதமிழனுக்காக போராடுவதாக சொல்லி களமிறங்கும் இவர்கள் அதே தமிழனின் சொத்தை சூறையாடுவது இவர்களின் "மனசாட்சிக்கே" முரண்பாடாக தெரியவில்லையா???