பெரிய தெரு முதல் முட்லூர் சந்திப்பு வரை உள்ள சாலை தரமான (கவனிக்கவும் தரமான...) முறையில் போடப்பட்டு வருகிறது என்பதை (முதல் கட்டம்) இதன் மூலம் தமிழ் கூறும் பரங்கிபேட்டை நல்லுலகிற்கு தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம் (கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.... இனி எதை குறை சொல்றது...)
ஆனால் பாதி ரோடு போட்டு கொண்டு இருக்கும் போதே ஏதோ இவர்கள் வீட்டு முற்றத்தில் சறுக்கி விளையாடுபவர்கள் போல யாரையும் கவனிக்காமல் பயங்கர வேகத்தில் பைக் ஒட்டி செல்பவர்களை பார்க்கும் போது சரிதான் நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன், நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன், நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன் என்று வடிவேலு போல மூன்று முறை வீட்டில் சொல்லிவிட்டு வந்திருப்பார்களோ என்று தோன்றியது.
பொருத்தார் பூமி ஆள்வார் என சொல்வார்கள்
பதிலளிநீக்குபெரிய தெரு முதல் முட்லூர் சந்திப்பு வரை உள்ள சாலை நல்ல முறையில் போடப்பட்டு வரும் செய்தி மனதிற்க்கு மிக மகிழ்ச்சியளிக்கும், அதே நேரத்தில் இந்த புத்தம் புதிய சாலையில் கண்முடி தனமாய் "பைக்" ஓட்டும் இளைஞர்களை நினைத்தால் பயமாதான் இருக்கு.
பொருக்கமுடியலீங்க....
பதிலளிநீக்குஉங்க வலைப்பூவின் முந்தைய மாதிரியை மாற்றிவிட்டு புதிய மாதிரியை புகுத்தியதை பொருக்கமுடியலீங்க......
அழகு என்றால் அது பழசுதான்.
Assalaamu Alaikum...mypno team.
பதிலளிநீக்குBlog looks cool...u have any tips on how to decorate?
where to get these info....?
Wassalaam
Abbas al parangi al singapoori
புதிய வடிவத்திற்கும், தொடரும் கலக்கலான நடைக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குAbu Princess, உங்கள் வேகமான பதிவுகளும், தெளிவான படங்களும், எழுத்துநடையும்.... அருமை. தொடர்க..துலங்குக.
(எழுத்துப்பிழைகளைக் குறைப்பது பற்றியும் சிறிதேனும் அக்கறை எடுத்துக்கொள்ளலாமே என்கிற ஒரு வேண்டுகோளை இத்தளத்தின் மீதும் உங்கள் மீதும் உள்ள அக்கறையில் இத்தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.)
Assalamualaikum,
பதிலளிநீக்குAs above mr. Hamdhun and mr. Sultan noted that the new look is really cool i too agree that note. but the posting Date is missing from the previous one, try to get that because, the time is shown we may think that this is posted today. at top text colour is white which is not that much visible.
sorry i could not type it in Tamil text as you advised me before. Insha Allah i'll try next time.
Hamdhi Abbas.
உங்கள் புதிய வலைத்தள வடிவமும் வண்ணமும் மிகவும் அருமை.
பதிலளிநீக்குஇந்த செய்தியின் முதல் படத்திலேயே உங்கள் ஜெனிஃபா கம்ப்யுட்டர்ஸ் விளம்பரத்தை காட்டிவிட்டீர்களே !!!
அபு ப்ரின்செஸ் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
பதிலளிநீக்குசெய்தி பதிவிட்ட நேரம் மட்டும் உள்ளது, ஆனால் தேதி இல்லை.
ஒரு செய்திக்கு நேரத்தை விட தேதியே மிக முக்கியமான ஒன்று என்பது சிறந்த பத்திரிக்கையாளரான உங்களுக்கு தெரிந்ததே ! ஏனென்றால் அந்த தேதியை வைத்துதான் பழைய செய்திகளை மறுபடியும் வாசிக்க இலகுவாக இருக்கும்.
பழைய வலைத்தளத்தில் இருந்தது போன்று தேதியுடன் செய்தியை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
- அலி அப்பாஸ்
தயிர்(நெய் , கொட்டி கிழங்கு கூட இருக்கலாம்) விக்கிற கிழவி யை கொஞ்சம் ஊரு பக்கம் விற்க சொல்லலாம், மாறாக நீங்கள் கடல் பக்கம் அல்லவா விற்க அனுப்பு கிறீர்கள். சுனாமி க்கு அப்புறம் அங்கு ஏதேனும் குட்டி தீவு உருவாகி உள்ளதா .
பதிலளிநீக்குதேங்க்ஸ் .
Syed
தொழில்நுட்ப கோளாறுகளினால் இடுகைகளில் (Posts) தேதி விடுபட்டிருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. தகவல் அளித்த வாசகர்களுக்கு எமது நன்றிகள்.
பதிலளிநீக்குசுல்தான் அப்பாஸ்! வெப் வடிவமைப்பு குறித்து mgfakrudeen@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.