புவி வெப்பமாதல் குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது கிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம். நேற்று காலை பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் நடைபெற்ற இப்போட்டியில் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்குப் பெற்றனர். இப்போட்டியில் கலந்துக் கொண்ட மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இரு பிரிவாக நடந்த இப்போட்டியில் முதற்பிரிவில் அரசு ஆண்கள் பள்ளியைச் சார்ந்த மாணவன் ஸ்ரீதரும், இரண்டாவது பிரிவில் கலிமா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி ஃபாத்திமாவும் முதல் இடத்தை பிடித்தனர்.
இப்போட்டியை பரங்கிப்பேட்டை இஸ்லாமியச் சங்கம் (ரியாத்) நிர்வாகி செய்யது முஸஸ்தபா தலைமையில், பேரூராட்சி மற்றும் ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் துவங்கிவைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் ஆராய்ச்சிப் பிரிவைச் சார்ந்த டாக்டர் ராஃபி கலந்துக் கொண்டார். CWO தலைவர் இர்பான் நன்றியுரை வழங்கினார்.

image courtesy: CWO blog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக