திங்கள், 2 பிப்ரவரி, 2009

நாங்கள் வேண்டுமென்று புறக்கனிக்கவில்லை

இம்மாதம் நடைபெறவுள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்களுக்கு ஓட்டு போடும் உரிமையை மறுத்துவிட்ட தேர்தல் குழு, இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிற காரணத்தையும் சொல்லியிருக்கிறது. ஆனால் இது வெளிநாட்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆன்லைன் ஓட்டு (எப்படி) பொருந்தி வராது என்கிற காரணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்துக்கள் அதிகமாக NRI களிடையே எழுந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான I. இஸ்மாயில் மரைக்காயரை தொடர்பு கொண்டு கேட்டோம்.

"NRIகளை வேண்டுமென்று நாங்கள் புறக்கனிக்கவில்லை. இதில் சில சிக்கல்கள் இருந்து வருகிறது. குறிப்பிட்டு சொன்னால், இத்தேர்தலில் 4-5 ஓட்டு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற நேரிடுமேயானால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தை நாடினால், அது பல வகையில் சிக்கல்களை ஏற்படுத்தும். பிறகு இத்தேர்தல் நடந்தேறியதற்கான அவசியம் இல்லாமல் போய்விடும். எனவே இந்த ஆன்லைன் ஓட்டு முறையை இத்தேர்தல் குழு இதற்கு பொருந்தி வராது என்கிற முடிவை எடுத்துள்ளது" என்று கூறினார்.

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    ஆன்லைன் ஓட்டு முறை சாத்தியமில்லை என்றால்...

    வெளிநாடு / வெளியூர் / வெளி மாநிலம் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் அந்தந்த இடங்களில் அமைப்புகள் ரீதியாக ஒன்று கூடியிருப்பார்கள் அல்லவா? அந்த அமைப்புகளின் சார்பாக தேர்தல் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு ஒரே நாளில் அந்த அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் முன்னிலையில் ஓட்டுப்பதிவை நடத்தி, பதிந்த வாக்குகளை யாரும் பார்க்காமல், மூடி யிட்டு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அனுப்பி வைக்கப்பட்டால் அதாவது (தபால் வாக்குகள் போன்று) நன்றாக இருக்குமே...!

    (அது மடடுமன்று... ஆன்லைனில் ஓட்டு போட எல்லோரும் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும் சகோதரர்கள் அல்ல... நிறைய சகோதரர்கள் வீட்டு வேலைகளையும், எடுபிடி வேலைகளையும் செய்பவர்கள்... அவர்களால் எப்படி ஆன்லைன் ஓட்டு போட முடியும்?)

    "இப்படி வரும் தபால் ஓட்டுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.எதிர்காலத்தில் பிரச்சினை செய்யமாட்டோம்" என்று வேட்பாளர்களிடம் உறுதிமொழி கையொப்பம் வாங்கி வைத்துக்கொண்டால் பிரச்சினைக்கு இடமேது?

    பதிலளிநீக்கு
  2. "ஆன்லைனில் ஓட்டு போட எல்லோரும் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும் சகோதரர்கள் அல்ல... நிறைய சகோதரர்கள் வீட்டு வேலைகளையும், எடுபிடி வேலைகளையும் செய்பவர்கள்... அவர்களால் எப்படி ஆன்லைன் ஓட்டு போட முடியும்?"

    கலீல் சாப்
    உங்கள் கருத்து சிந்தனை நல்லாயிருக்குது. ஆன்லைன் வாக்களிப்பு முறை வசதியுள்ளவர்களுக்கே வாய்க்கும் என்பதால், அதுவும் மேலும் தபால் ஓட்டும் நல்ல ஆலோசனை. இதன் சாதக பாதகங்களை பரிசீலித்து தேர்தல்குழுவினர் முடிவெடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வரும் கள்ள ஓட்டுகள் என்ற ஒரு அச்சத்தையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கும். முதலில், உங்கள்யோசனையை அபுபிரின்ஸ் மூலமாக சொல்லி தேர்தல்குழுவின் சம்மதம் வாங்க சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...