செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பு





முஸ்லிமகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டிய நமது சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது பிரிந்து நின்று சமுக ஒற்றுமையை பல்லிளிக்க வைத்து கொண்டிருக்கும் வேளையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் நிகழ்வாக சிறு மற்றும் பெரு ஊர்களின் முஸ்லிம் ஜமா-அத்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் முஸ்லிம் ஐக்கிய ஜமா-அத் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான கூட்டம் இன்று (10/பிப்ர/2009)ஷாதி மஹாலில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 230 மஹல்லாக்களில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.அரசின் சலுகைகளை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு பெற்று தருவதை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ஜமா-அத்தின் தலைவராக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் தலைவர் முஹம்மது யூனூஸ் செயலாளராக கடலூர் ஓ.டியை சேர்ந்த கமலூதீன் பொருளாளராக விருதாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சிக்கந்தர் ஹயாத் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.பிற விவரங்கள் விரைவில்...

1 கருத்து:

  1. அஸ்லாமு அலைக்கும்,

    ஒற்றுமை என்பது "குரான் மற்றும் ஹதிஸ்-யை பின்பற்றுவது மூலம்தான் ஏற்படும். இது இல்லாமல் "ஒற்றுமை" என்பது அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல்தான்!...

    "அல்லாஹ்" இவ்வாறு தன் திருமறையில் கூறுகிறான்.....


    இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை (குரான்) வலுவாக பற்றி பிடித்து கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீகள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை)நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பினைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்காய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீகள்: அதனின்றும் அவன் உங்களை காப்பாறினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல் குர்ஆன் 3:103)

    அன்புடன்,
    அப்துல் ரஹ்மான்,
    பரங்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...