ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

நமது தேர்தல் அதிகாரிகள்


பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருக்கான தேர்தலில் யார் அல்லது எது எப்படி போனாலும், தேர்தல் தான் என்று முடிவான ஆறாம் தேதி மாலை முதல் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டவர்கள் வேறு யாருமல்ல.... நமது தேர்தல் அதிகாரிகள் தான். 
வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, சுமூகமான தேர்தல் நடைமுறைக்கு திட்டமிட்டு செயல்களை முன்னெடுத்து செல்லுதல் என்று முதுகு வலி வராத குறைதான். சும்மாவே கருப்பு அல்லது வெள்ளை மனோபாவம் (ஒன்னு இப்படி இரு அல்லது அப்படி இரு நடுவுல இருக்காதே இருக்க விடவே மாட்டோம் ) கொடி கட்டி பறக்கும் நம் தாய் திரு நகரில் (இந்த வார்த்தை நல்ல இருக்கே ... copyright owned ) நடுநிலைமை பேணுவது என்பது எத்தனை கஷ்டம் என்பது இவர்கள் படும் பாட்டை பார்த்தாலே தெரிகிறது. 

தேர்தல் அதிகாரிகளில் நால்வர் பல அரசு தேர்தல்களை நடத்தி முடித்த அனுபவம் உள்ளவர்கள். மெத்த படித்த இவர்களிடம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தானும் ரூல்ஸ் பேசவேண்டும் என்று சில தகுதி அற்ற மக்கள் வந்து குரல் உயர்த்தி பேசும் போது அதை காணும் நாமும் மனதளவில் நொந்து போகிறோம்.

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ்,

    தேர்தல்அதிகாரிகள் அனைவருமே ஒட்டுமொத்த பரங்கிப்பேட்டையின் அபிமானத்தைப் பெற்றவர்கள். சார்பற்றவர்கள். நேர்மையானவர்கள்.

    எனினும், எனக்குள்ள ஆதங்கமெல்லாம் உணவில் ஒன்றுபடும் அளவுக்குக் கூட உணர்வில் ஒன்றுபடாமல் தேர்தல் வரை வந்துவிட்டோமே என்றுதான். விட்டுக்கொடுத்தலுக்கு நாமே முன்மாதிரிகளாகி தேர்தலை தவிர்த்துவிட்டு, ஏகமனதாக யாரேனும் ஒரு தகுதிவாய்ந்த தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். தொலைநோக்கில் பார்த்தால், தேர்தலைத் தவிர்ப்பதிலே நன்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு