ஜமாஅத் தலைவருக்கான தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட ஆப்பிள் சின்னத்தின் வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது 785 வாக்குகள் பெற்றார். இது குறித்து அவரிடம் நாம் கேட்ட போது, நான் வெற்றிப் பெற்றிருந்தால் சமுதாயப் பணிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து சேவை செய்வேன் என்கிற நிலையிருந்து மருத்துவ சேவைகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்துவேன் என்று கூறியதோடு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.
மேலதிகமாக பரங்கிப்பேட்டை கூகிள் குழுமத்திற்கு அளித்த டெலிபோன் பேட்டியை வாசகர்களின் பார்வைக்காக கீழே:....
தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து?
குறைந்த அளவு ஓட்டுகளே கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 800 ஓட்டுகள் கிடைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் ஓட்டுரிமை இருந்திருந்தால் நான் வெற்றிப் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும்.
டாக்டர் நூர் முஹம்மத் அவர்களின் ஆலோசனையையும் பெற்று ஜமாஅத்தை நடத்துவேன் என்று யூனுஸ்நானா தனது நன்றியுரையில் கூறியுள்ளாரே?
அது அவரது பெருந்தன்மையின் அடையாளம்.
பெண்களுக்கு ஓட்டுரிமை பற்றி குறிப்பிட்டதால் ஒரு கேள்வி. சமீபத்தில் பெண்களுக்கான ஒரு அமைப்பு என்ற தகவல் குழுமத்தில் வைக்கப்பட்டதே..அது குறித்து...?
அந்த அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. அது முழுக்க யூனுஸுக்கு எதிராக துவங்கப்பட்டது போன்றுதான் தெரிகின்றது. வெறும் அரசியல் அவ்வளவுதான்.
NRIகளுக்கு கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?
வெளிநாட்டு பரங்கிப்பேட்டை மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும்.
we must give voting rights to our woman folks.........i think that even having to discuss granting rights to woman is a bloody disgrace......the next best thing would be setting up a womens wing in the jamat.......
பதிலளிநீக்கு