செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

மருத்துவர்கள் பற்றாக்குறையா?

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் பேசுகையில்,
"பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டிட வசதிகள் இருந்தும், போதிய மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறார்கள், அதுவும் இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதில்லை. அது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதற்கு அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகையில், "பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அந்த மருத்துவமனை கடற்கரை ஓரமாக இருக்கின்ற காரணத்தினால் அதை பயன்படுத்த மக்கள் வரவில்லை. இந்த ஆண்டு 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்குவதாக முதல் அமைச்சர் அறிவித்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையை முடிந்தவரையில் அதை புதிய மருத்துவமனையாக உருவாக்குவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி: தினத்தந்தி 24-02-2009

2 கருத்துகள்:

  1. Quote:
    //அந்த மருத்துவமனை கடற்கரை ஓரமாக இருக்கின்ற காரணத்தினால்
    அதை
    பயன்படுத்த மக்கள் வரவில்லை//


    என்று அந்த அமைச்சர் சொல்லியிருப்பதில் முதல் பகுதி அபத்தம்.
    அதற்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

    ஆனால் இரண்டாம்
    பகுதி உண்மை.
    நமது மக்கள் யாரும் அந்த மருத்துவமனையின் அரசாங்க
    வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள
    முன்வருவதில்லை.
    பரங்கிப்பேட்டையின் வெளிநாட்டுகாசு , மருத்துவம்
    என்று வருகையில், வெளியூர் மருத்துவர்களுக்கே
    போகிறது.

    பொதுமக்களின் 'லுக்கு'க்கு கூச்சப்பட்டு
    தப்பித்தவறி அரசாங்க ஆஸ்பத்திரியில்
    யாரும் நுழைந்தாலேஆச்சரியம்தான். ஆனால் அங்கே சிறப்பான
    வசதிகள் இருப்பதாகவே தெரிய வருகிறது.

    இதே மக்கள்
    தான் ஆஸ்பத்திரியை சீக்கிரம்
    திறக்கச்சொல்லி...கேட்டவய்ங்க என்பது இன்னொரு முரண்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...