ஞாயிறு, 1 மார்ச், 2009

பெண் ஆசிரியைகள் நியமிக்க செழியன் கோரிக்கை!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் செழியன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்:

அதில் ,
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தகராறு செய்து கொண்டு ஆபாசமாக நடந்துக் கொண்டனர். ஆண் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பெண் ஆசிரியர்களே நியமிக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் நியாயமாக எதிர்பார்க்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து பெண் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...