செவ்வாய், 10 மார்ச், 2009

சட்டென்று மாறியது வானிலை

இந்த கோடை வெயிலுக்கு மூனாருக்கோ கொல்லி மலைக்கோ தப்பித்து ஓடி விட பரங்கி மகா ஜனங்கள் சிலர் திட்டமிட்டு இருந்திருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு நாட்க்களாக ஊட்டியை தூக்கியடிக்கும் ரம்மியமான பரங்கிபேட்டை கிளைமேட்டை பார்த்து அவர்கள் நிச்சயம் தங்கள் திட்டத்தை மாற்றி கொண்டிருப்பார்கள்.

சில வாரங்களாக கொளுத்தி எடுத்த வெயிலுக்கு பதில் செய்வது போல் இதமான தூறல், அழகான காற்று, மிதமான மழை என்று களை கட்டுகிறது பரங்கிபேட்டை சீதோஷன நிலை.


இதோ இப்போது கூட, இருண்ட வானமும், அது பொழியும் ஜில் மழையும், அது தரும், உடம்பை ஊடுருவும் குளிருடனும் இந்த பதிவினை பதிக்கிறோம். (வெளிநாட்டு சகோஸ்... பொறாமை தவிர்க்க)


இந்த திடீர் பருவ மாற்றத்தின் ஒரே ஒரு சந்தோஷ முரண் : வழக்கமாக காலை 8 - 10 போகும் கரண்ட் கூட இன்று போகவில்லை. (இப்ப தானே சொல்லி இருக்கோம்....)

2 கருத்துகள்:

  1. எஞ்சாய்....உள்நாட்டு சகோ'ஸ்.

    அதுசரிண்ணே, பரங்கிப்பேட்டையை ஏன் எப்பவுமே பரங்கி''பேட்டைன்னே எளுதுறீங்க?

    பதிலளிநீக்கு
  2. இங்கே எப்போது சிறிதளவாவது சூரியனை காணமுடியும் என்ற ஆவலில் இருப்பதால் பொறாமை பட வழியில்லாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...