ஒரு சந்தோஷமான நிகழ்வு: அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் தமது கடைக்கண் பார்வையை பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலை பக்கமும், ரயிலடி பாலம் மீதும் திருப்பியுள்ளது சந்தோஷமான நிகழ்வு என்று தானே சொல்ல வேண்டும்.
6 கி.மீ தூரம் உள்ள பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலையில் எதிரே இரு பஸ்கள் வந்து விட்டால், மண்ணில் தான் இறங்க வேண்டும், இது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலையை சீர் செய்து அகலப்படுத்த வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர், அதனடிப்படையில், ரூ 1.76 கோடியில், அகலப்படுத்தி, புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது மேலும், அகரம்-ரயிலடி அருகே சேதமடைந்த பாலத்திற்கு பதில் புதியதாக பாலம் கட்டப்படுகின்றது, இதன் காரணமாக வாகனங்கள் மாற்று வழியாக செல்ல பழைய பாலம் அருகே புதியதாக சாலை போடும் பணி நடப்பதாக, தினமலர் நாளேடு (17-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை வலைப்பூ/இணையதளத்தின் சார்பாக, நாமும் இதுகுறித்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம், நமது இணையதளத்திற்கு அளித்த செவ்வியில், "முட்லூர் ரோடு உங்களுக்கே சங்கடமாக இல்லையா?" என்ற வினாவினையும் அவர் முன் வைத்திருந்தோம் என்பது இங்கே நினைவுக்கூறதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக