நமதூர் அரசு மருத்துவமனை புதிய பொலிவான கட்டிடமாக கட்டப்பட்டது மக்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. தற்போது மருத்துவமனை வளாகத்தின் உள்ளே ஒரு தனி கட்டிடமும், ஆம்புலன்ஸ் நிறுத்த ஒரு புதிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. சந்தோஷம்.
இது அது அல்ல
ஆனால் இந்த நல்ல விஷயங்களில் ஒரு பெரும் உறுத்தலாக நமது அரசு மருத்துவமனையின் தென் புறம் ஓங்கி வளர்ந்து நிழல் தந்து கொண்டு இருந்த பெரிய வேப்ப மரம் ஒன்று இன்று காலை முழுவதுமாக வெட்டி வீழ்த்தப்பட்டது.
மரம் வெட்டப்படும் வேலை துவங்கிய உடன் நாம் சென்று பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களை சந்தித்து இது பற்றி கேட்டோம். அதற்க்கு அவர் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கட்டிடங்களையும் பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறைதான் மருத்துவமனை கட்டிடங்களுக்கும் நுழைவாயிலுக்கும் மரம் இடைஞ்சலாக இருப்பதால் அதனை வெட்டிவிட தீர்மானித்தது. அதற்க்கு முறைப்படி ஏலம் விடப்பட்டு, சில நாட்க்களுக்கு முன்பு ஏலம் வழங்கப்பட்டது. இது முழுமுதலாக தமிழக பொதுப்பணித்துறையின் விஷயம். இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை என்றார்.
தமிழ் கூறும் பரங்கிபேட்டை நல்லுலகில் நாய், பேய் அடிப்பட்டால் எல்லாம் கவனிக்க, பிரச்சனை பண்ண ஆள்களும் அமைப்புக்களும், கட்ச்சிகளும் கரைகளும் நிறைய உள்ளன. மரங்கள், அவை தரும் நலன்கள் பற்றி சொல்ல தேவையில்லை, அதுவும் இந்த குளோபல் வார்மிங் யுகத்தில்.... கிரசன்ட் போன்ற அமைப்புக்கள் ஊரெங்கும் மரங்கள் வளர்ப்பதில் காட்டி வரும் அக்கறைக்கும் முயற்சிக்கும் மத்தியில் இது போன்ற மரம் வெட்டல்களை தடுக்க அட்லீஸ்ட் பார்த்து வருத்தம் தெரிவிக்க ஒரு கிரீன் பீஸ் போன்ற அமைப்பு கூட இல்லாதது வருத்தமாக தான் உள்ளது. ( இது போல சமீப காலத்தில் கூட ஒரு முக்கிய பள்ளியில் மரம் வெட்டப்பட்ட போது பெரும் பிரச்சனை எழுவது போல் விஷயம் முற்றியது நினைவில் கொள்ளதக்கது. ).
நமது அடுத்த தலைமுறைக்கு நாம் எதை பரிசளித்து செல்லப்போகிறோம்.... வெறுமையான வெயில் பாரித்த தெருக்களை, வறண்டு போன நிலங்களை, தூர்ந்து போன குளங்களை, குப்பைகளும் கெமிக்கல்கலும் சூழ்ந்த நரகத்தை.... நினைத்துப்பார்த்தால் கலக்கமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் நமது அலட்சியம் நிச்சயம் பெரும் பாதிப்பாய் வந்து விடியும். மரம் வெட்டுவது என்பது குறிப்பாக இது போன்ற இடங்களில் தவிர்க்க முடியாதது தான். ஆனால் மரம் வெட்டுபவர்கள் (வீட்டிலும் சரி பொதுவிலும் சரி) சமுதாய உணர்வோடு அட்லீஸ்ட் இரண்டு மரமாவது நட்டு வைத்துவிட்டு பிறகு தூக்குங்கள் அரிவாளை, கோடாரியை...
இந்த மரத்தை விட்டு விடலாம். இனி எந்த மரம் என்றாலும் வெட்டப்படுவது மரம் மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததியினரின் நலவாழ்வும் தான் என்பதை மனதில் வைப்போம் .
மரம் வளர்ப்பது இருக்கட்டும்
பதிலளிநீக்குஇத பத்தி எழுதி பிரச்சனை எதுவும் வளர்த்துட மாட்டீங்களே ஹமீது மரைக்கார்?
உங்க சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள். மனுஷன வெட்டுரதையே சாதாரண விஷயமாக பார்க்குற இந்த காலத்துல, மரத்துக்கு பரிஞ்சி பேச உங்கள் மாறி ஆளுங்க இருக்காங்களேன்னு சந்தோஷமா இருக்கிறது.
பதிலளிநீக்குநமது அடுத்த தலைமுறைக்கு நாம் எதை பரிசளித்து செல்லப்போகிறோம்.... வெறுமையான வெயில் பாரித்த தெருக்களை, வறண்டு போன நிலங்களை, தூர்ந்து போன குளங்களை, குப்பைகளும் கெமிக்கல்கலும் சூழ்ந்த நரகத்தை.... நினைத்துப்பார்த்தால் கலக்கமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் நமது அலட்சியம் நிச்சயம் பெரும் பாதிப்பாய் வந்து விடியும்... உண்மையான வார்த்தைகள்
வெட்டபடுவது = வெட்டப்படுவது
பதிலளிநீக்குகாண கிடைத்தது = காணக் கிடைத்தது
கட்டிடமாக கட்டப்பட்டது = கட்டிடமாகக் கட்டப்பட்டது.
மன்ற தலைவர் = மன்றத் தலைவர்
அதற்க்கு = அதற்கு
நாட்க்களுக்கு = நாள்களுக்கு
பரங்கிபேட்டை = பரங்கிப்பேட்டை
அடிப்பட்டால் = அடிபட்டால்
கட்ச்சிகளும் = கட்சிகளும்
(போங்கப்பா, போரடிக்குது :-(
- அதே வாசகன்.
அழுத்தமான பதிவு ஹமீத்.
பதிலளிநீக்கு