"பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்" என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
- பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங், இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது.
- இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்.
- தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
- எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய், இதர பிரிவினர் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
- விண்ணப்பத்தைப் பெறும் மாணவர்களுக்கு 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பு வழங்கப்படும்.
- விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.
- மே மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
- ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
- மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கும்.
இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக