திங்கள், 6 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு - சமூக நல பாதுகாப்பு தாசில்தார் நடவடிக்கை

பரங்கிப்பேட்டையில் அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்ட சுவர் விளம்பரங்கள் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் உத்தரவின்பேரில் அழிக்கப் பட்டன.

டிஜிட்டல் பேனர்கள்

பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் உத்தரவின்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரங்கள் உள்ளதா என்று கண்டறிய நேற்று முன்தினம் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் அசோகன் பரங்கிப்பேட்டைக்கு வந்தார்.

ஆய்வு

அதையடுத்து அவர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி முழுவதும் அரசியல் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது அகரம் பகுதியில் சுவர் விளம்பரம் இருந்தது. அதேபோல் பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களும் இருந்தது. அதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் பரங்கிப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது. அவருடன் பேரூராட்சி செயல் அதிகாரி சேவியர் அமுல்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...