பரங்கிப்பேட்டையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான். இவரது மனைவி பிரேமா (வயது 26). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி பிரேமாவை அடித்தார். அவர் அடிக்கு பயந்து போன பிரேமா பக்கத்து வீட்டை சேர்ந்த குப்புராஜ் வீட்டுக்குள் சென்றார்.
இதை பார்த்த நாகூரான், குப்புராஜிடம் தனது மனைவியை வெளியே அனுப்புமாறு கூறினார். அதையடுத்து 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை அந்த வழியாக வந்த கார்மேகம் தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த நாகூரான், அவருக்கு ஆதரவாக சுரேஷ், நடேசன், கண்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கார்மேகத்தை தாக்கியதாக தெரிகிறது. உடன் குப்புராஜ், கார்மேகம், அஞ்சப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு கண்ணனை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கண்ணன், கார்மேகம் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.
இது பற்றி கார்மேகம் மனைவி கமலாவும், கண்ணனும் பரங்கிப்பேட்டை போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், நாகூரான், நடேசன், கார்மேகம், அஞ்சப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
Source : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக