பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நல்ல பாம்புடன் பூனை சண்டை போட்டதை பார்த்த போலீசார் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் வாடகை ஓட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அவ்வப்போது பூனை, பாம்பு சகஜமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்து செல்லும்.
நேற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எழுத்தர் அறை அருகே திடீரென நல்ல பாம்பு ஒன்றுடன், பூனை சண்டை போட்டு கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு எட்டி பார்த்தபோது, பாம்பு தலையை தூக்கியவாறு நின்று கொண்டிருந்ததை கண்டு போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து பரங்கிப்பேட்டையில் இருந்து இருளரை வர வழைத்து பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.
Source: தினமலர்
"ஸ்நேக்" பாபு ....."பூனை" மணி என்று எந்த ரவுடியாவது வந்தா அப்பவும் இதே ஓட்டம் தானா!
பதிலளிநீக்குSir
பதிலளிநீக்குIam also from parangipettai.
If u have time please visit my blog..
பதிவுக்குள்ள இன்னும் போகல.தலைப்பு சிரிப்பை தந்தது.
பதிலளிநீக்குஇதென்ன இரண்டு வெட்டி ஒட்டல்?சைஸ குறையுங்க.
பதிலளிநீக்குசட்டக் கல்லூரி மாணவர்கள் சண்டையானால் மட்டுமே பார்ப்பார்கள்;ரசிப்பார்கள். பாம்பு- பூனை சண்டையெனில்
பதிலளிநீக்குஓடுவார்கள்