ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டை நடுக்கடலில் கூலி தொழிலாளி பலி

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் தனியார் எண்ணை நிறுவன கூலி தொழிலாளி பலி!கப்பலில் இருந்து பொருட்களை இறக்கிய போது படகில் இருந்து தவறி விழுந்தார் .

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் கப்பலில் இருந்து பொருட்களை இறக்கிய போது தனியார் எண்ணை நிறுவன கூலி தொழிலாளி பலியானார்.

கூலி தொழிலாளி

கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கந்தன் (வயது 40). இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியக்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எண்ணை நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்.

நேற்று கந்தன் கப்பலில் எண்ணை நிறுவனத்திற்கு வந்த பொருட்களை இறக்கி கொண்டு வருவதற்காக படகில் கடலுக்கு சென்றார். பின்னர் நடுக்கடலுக்கு சென்றதும் கப்பலில் உள்ள பொருட்களை பாட்ஜி (கொக்கி) போட்டு இறக்கிக் கொண்டிருந்தார்.

பலி

அப்போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. உடன் அவருடன் சென்றவர்கள் கடலில் குதித்து தேடினர். இருப்பினும் அவரை காண வில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து பெரியக்குப்பம் கடற்கரையோரம் கந்தன் உடல் கரை ஒதுங்கியது.

இது பற்றி தகவல்அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...