
இது குறித்து அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக முகவரி சான்று அட்டை எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு வெளி இடங்கள், ஊர்களுக்கு செல்ல நேரிடும் சந்தர்ப்பங்களில் அவர்தம் முகவரியை சான்று அடையாள அட்டையாக இந்த முகவரி சான்று அட்டை விளங்குகிறது.
கடலூர் அஞ்சல் கோட்டத்தில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
முகவரி சான்று அட்டை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 10 ரூபாய் விலையில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் கிடைக்கும்.
பொதுமக்கள் விண்ணப்படிவத்தை நிரப்பி ஒரு அஞ்சல்தலை அளவு வண்ணப் புகைப்படத்தை கடலூர் தலைமை தபால் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி சான்று அட்டை தரம் நிறைந்த அழகிய வடிவத்தில் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படும்.
இந்த முகவரி சான்று அட்டை 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
கடலூர் தலைமை அஞ்சலகத்தில் தற்போது விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக