ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலை அட்மிஷன் அறிவிப்பு

ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழகம் (JMI) 2009-10ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் 32 துறைகளின் கீழ் 205 படிப்புகளையும், 12 ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்குகிறது. இப்படிப்புகள் அனைத்திற்கும் அட்மிஷன் துவங்கியுள்ளது. மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காகவே 1.10 லட்சம் விண்ணப்பம் மற்றும் விளக்க உரைகளை அச்சடித்துள்ளது.

பிஎச்.டி., (PhD) தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

மே முதல் வாரத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எம்.எஸ்சி. (MSc), எலக்ட்ரானிக்ஸ், பி.டெக். (B.Tech), மற்றும் இன்ஜினியரிங் சார்ந்த டிப்ளமோ படிப்புகளுக்கு அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு http://www.jmi.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...